துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) அதிகாரப்பூர்வ ஸ்மார்ட் செயலியின் புதிய பதிப்பு RTA ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இது பயனர்கள் அதன் சேவைகளை எளிதாக அணுகுவதற்கான எளிமையான வழிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்பயனாக்கப்பட்ட டாஷ்போர்டுடன் தடையற்ற மற்றும் வசதியான நேவிகேஷனுக்காக சேவைகளை ஒரே திரையில் ஒருங்கிணைக்கிறது.
இந்த ஸ்மார்ட் செயலியானது, பயனர்கள் தங்கள் வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை எளிதாக புதுப்பிக்கவும், சிரமமின்றி பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்தவும் உதவும் என கூறப்படுகிறது. எனவே, எமிரேட்டில் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் இப்போது செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பின் மூலம் தொந்தரவு இல்லாமல் பணம் செலுத்தலாம்.
கூடுதலாக, சாலிக் ஆன்லைன் பேமெண்ட்கள், வவுச்சர் டாப்-அப் மற்றும் நோல் டாப்-அப் ஆகியவை ஸ்மார்ட் செயலியின் புதிய அப்டேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன, இது பரிவர்த்தனைகளை இன்னும் வசதியாக்குகிறது. ஒட்டு மொத்தமாக செயலியின் புதிய அப்டேட், வாகன உரிமங்களைப் புதுப்பித்தல் மற்றும் அபராதம் செலுத்துதல் ஆகியவற்றுக்கான தொந்தரவு இல்லாத செயல்முறையை இது உறுதி செய்கிறது.
இது குறித்து RTA இன் ஸ்மார்ட் சேவைகளின் இயக்குநர் மீரா அல் ஷேக் என்பவர் பேசுகையில், புதுப்பிக்கப்பட்ட RTA பயன்பாட்டின் மூலம், எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் சேவைகளுடன் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறோம். இது அத்தியாவசிய சேவைகளை விரைவாக அணுகுவதை உறுதி செய்கிறது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த மேம்படுத்தல் நடவடிக்கையானது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வசதியான மற்றும் திறமையான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்குவதற்கான RTA இன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், RTA செயலியின் புதிய பதிப்பு இப்போது iOS மற்றும் Android இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel