ADVERTISEMENT

துபாய் மற்றும் ஷார்ஜாவில் இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் மீண்டும் தொடக்கம்..!! RTA மற்றும் SRTA அறிவிப்பு..!!

Published: 4 May 2024, 8:43 AM |
Updated: 4 May 2024, 8:43 AM |
Posted By: Menaka

ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (SRTA) எமிரேட்களுக்கு இடையேயான அதன் இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை கனமழை காரணமாக நிறுத்தி வைத்திருந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் அதன் சேவையை தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

நேற்று முன்தினம் (மே 2) நாட்டில் ஏற்ற இறக்கமான வானிலை நிலவியதால், ஷார்ஜாவின் போக்குவரத்து ஆணையம் துபாய், அபுதாபி உள்ளிட்ட மற்ற எமிரேட்களுக்கு இயக்கப்படும் அதன் இன்டர்சிட்டி பேருந்து சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கனமழை எச்சரிக்கை காரணமாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையமும் (RTA) அதன் இன்டர்சிட்டி பேருந்து சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் மோசமான வானிலை முடிவுக்கு வந்ததால் RTA வும் இன்டர்சிட்டி பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவதாக நேற்று அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக, அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், வியாழக்கிழமை தீவிரமடையும் வானிலையால் அமீரகம் முழுவதும் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து அனைத்து எமிரேட்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது போக்குவரத்து சேவைகளில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel