துபாயில் குடியிருப்பாளர்களையும் ஷாப்பிங் ஆர்வலர்களையும் கவர்ந்திழுக்கும் மூன்று நாள் சூப்பர் சேல் (3DSS) இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. எதிர்வரும் மே 31 முதல் ஜூன் 2 வரை நடைபெறும் இந்த ஷாப்பிங் நிகழ்வில் சுமார் 2,000 விற்பனை நிலையங்கள் 500க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் செய்பவர்கள் துபாயில் உள்ள மால்கள் மற்றும் ஷாப்பிங் சென்டர்களில் ஃபேஷன் மற்றும் அழகு சாதன பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஹோம்வேர் சாதனங்கள் வரை என அனைத்தையும் அற்புதமான டீல்கள் மற்றும் தள்ளுபடி விலைகளில் வாங்கலாம் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோடைகாலத்தின் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் இந்த மூன்று நாள் சூப்பர் சேல் (3DSS) ஆனது, சீசனுக்கு தேவையான பொருட்களை சேமித்து வைப்பதற்கான வாய்ப்பை குடியிருப்பாளர்களுக்கு வழங்குவதாக துபாய் ஃபெஸ்டிவல்ஸ் அண்ட் ரீடெய்ல் எஸ்டாப்லிஷ்மென்ட் (DFRE) நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், இது ஈத் அல் அதா பண்டிகைக்கு சில வாரங்களுக்கு முன்பு வருவதால், இஸ்லாமிய பண்டிகைக்காக ஷாப்பிங் செய்பவர்கள் இந்த தள்ளுபடி விற்பனையில் பொருட்களை வாங்குவதன் மூலம் தங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கணிசமாக சேமிப்பை பெறலாம் என்றும் DFRE நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த மாத இறுதியில் தொடங்கவிருக்கும் மூன்று நாள் விற்பனை நிகழ்வில், டிசைனர் உடைகள், காலணிகள், கடிகாரங்கள், கண்ணாடிகள், ஒப்பனை, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய பரிசுகள், கேட்ஜெட்டுகள், பொம்மைகள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றில் சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கும் என்று விசிட் துபாயின் (visit dubai) இணையதளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel