ADVERTISEMENT

மே 25-ம் தேதி துபாயில் இண்டர்வியூவை நடத்தவிருக்கும் ‘Transguard ‘ நிறுவனம்!! எமிரேட்ஸ் குழுமத்தில் டிரைவர் ஆகும் வாய்ப்பு …

Published: 22 May 2024, 4:17 PM |
Updated: 22 May 2024, 4:19 PM |
Posted By: Menaka

எமிரேட்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான ‘Transguard ‘ எனும் நிறுவனம் அதிக லிமோசின் ஓட்டுநர்களை பணியமர்த்துவதற்கு ஆட்சேர்ப்பு பணிகளை தொடங்கியுள்ளது என்றும், வரும் மே 25 அன்று எமிரேட்ஸ் தலைமையகத்தில் இதற்கான நேர்காணல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக இந்த வேலை தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் விமான நிறுவனத்தை ஆதரிப்பதற்கும் VIP பயணிகளுடன் நேரடியாக வேலை செய்வதற்கும் வாய்ப்பளிக்கிறது என்று விமான போக்குவரத்து இயக்குனர் கேத்தி மாஸ்டர்ஸ் கூறியுள்ளார்.

மேலும், Transguard அதன் ஊழியர்களுக்கு ஆற்றல்மிக்க மற்றும் உள்ளடக்கிய பணியிட சூழலை வழங்குவதால், அவர்களுக்கு சிறந்த வேலையை வழங்க முடியும் என்றும் கேத்தி தெரிவித்துள்ளார். Transguard நிறுவனம் அறிவிக்கும் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மே 2022 அல்லது அதற்கு முன் வழங்கப்பட்ட அமீரக ஓட்டுநர் உரிமம் மற்றும் வேலையுடன் தொடர்புடைய இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இந்த பணிக்கு விண்ணபிக்க முன் பதிவு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் 2.5 பில்லியன் திர்ஹம்ஸ் வருவாயைப் பதிவு செய்துள்ள Transguard நிறுவனம் அதன் வணிகத்தை மையமாகக் கொண்ட சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது, இதில் பாதுகாப்புச் சேவைகளும் அடங்கும். இருப்பினும், எத்தனை பேருக்கு புதிய வேலைகள் வழங்கப்படும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

எமிரேட்ஸ் குழுமம் கடந்த நிதியாண்டில் சாதனை அளவிலான லாபத்தை ஈட்டியதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, விமானிகள் மற்றும் கேபின் குழு உறுப்பினர்களை பணியமர்த்துவதன் மூலம், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel