ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், குடியிருப்பாளர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, லெப்டினன்ட் முஹம்மது ஒபைத் முபாரக் மற்றும் லெப்டினன்ட் சவுத் காமிஸ் அல் ஹொசானி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அபுதாபி காவல்துறை தெரிவிக்கையில், நேற்று வெள்ளிக்கிழமை அபுதாபியில் உள்ள ஷேக் சையத் சுரங்கப்பாதையில் ஒரு வாகனம் பழுதடைந்து நின்றது தொடர்பான அறிக்கைக்கு பதிலளிக்கும் போது திடீரென ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி இந்த இரண்டு காவல்துறையினரும் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர்.
மேலும், இரண்டு அதிகாரிகளும் பணியில் இருக்கும் போது உயிரிழந்ததால், அவர்கள் இருவரையும் கௌரவிக்கும் விதமாக, துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷேக் சைஃப் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கடமைக்கான பதக்கத்தை வழங்கி கௌரவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷேக் சைஃப் வெளியிட்ட X பதிவில், “லெப்டினன்ட் முபாரக் மற்றும் அல் ஹொசானி விசுவாசம் மற்றும் நேர்மையின் பாதையில் பிரகாசித்த கலங்கரை விளக்கங்கள் மற்றும் அமீரக மக்களுக்கு சிறந்த நேர்மறையான முன்மாதிரிகள்” என்று உயிரிழந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளின் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel