ADVERTISEMENT

அமீரகத்தில் 1,000 க்கும் மேற்பட்ட இணையதளங்களை அதிரடியாக முடக்கிய அமீரக அரசு..!! காரணம் என்ன..??

Published: 31 May 2024, 8:02 AM |
Updated: 31 May 2024, 8:02 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் பல்வேறு ஊடக நெட்வொர்க்குகளுக்கு சொந்தமான பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பி அறிவுசார் சொத்துரிமைகளை (intellectual property rights) மீறிய குற்றத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களை இந்த ஆண்டு முடக்கியுள்ளதாக பொருளாதார அமைச்சகம் (MoE) நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, ரமலான் காலத்தில் மல்டிமீடியா உள்ளடக்கத்திற்கு அதிக தேவை இருந்தபோது, ​​பெரும்பாலான சட்டவிரோத வலைத்தளங்கள் தடுக்கப்பட்டதாக பொருளாதார அமைச்சகத்தின் அறிவுசார் சொத்து உரிமைகள் துறையின் உதவி துணைச் செயலாளர் டாக்டர் அப்துல்ரஹ்மான் ஹசன் அல் முயைனி (Dr. Abdulrahman Hassan Al Muaini) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அல் முயைனி பேசும் போது, “இந்த ஆண்டு புனித ரமலான் மாதத்தில் ‘InstaBlock’ எனப்படும்  முன்முயற்சியை செயல்படுத்தியதில் இருந்து, பல்வேறு ஊடக நெட்வொர்க்குகளுக்கு சொந்தமான பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்புவதன் மூலம் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய 1,117 இணையதளங்களை நாங்கள் தடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “நேரடி ஆன்லைன் ஒளிபரப்பில் பதிப்புரிமை மீறல்கள் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கான சிறப்பு உடனடி பதில் சேவையை வழங்கும் விரிவான அணுகுமுறையை நாங்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம் என்பதை இது நிரூபிக்கிறது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், எனும் ‘InstaBlock’ இந்த முன்முயற்சியானது இனி ஆண்டு முழுவதும் நடைபெறும் திட்டமாக மாறும் என்றும் செய்தி ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடைசெய்யப்பட்ட சட்டவிரோத இணையதளங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டில் இந்த மீறலுக்காக 62 தளங்கள் மட்டுமே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel