ADVERTISEMENT

அமீரகத்தில் கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை!! ஒரே நாளில் கிராமுக்கு 4 திர்ஹம்ஸ் அதிகரிப்பு..!!

Published: 16 May 2024, 4:24 PM |
Updated: 16 May 2024, 4:24 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று வியாழக்கிழமை தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் தங்கத்தின் சந்தை மதிப்பானது அமீரகத்தில் ஒரு கிராமுக்கு 4 திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

UAE நேரப்படி, இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் 24 காரட் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு 0.75 திர்ஹம்ஸ் உயர்ந்து சவரன் ஒன்றிற்கு 289.5 திர்ஹம்ஸ் ஆக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இது நேற்று புதன்கிழமை முடிவடையும் நேரத்தில் 288.75 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே, நேற்று காலையில் இருந்து இன்று காலை வரையிலான 24 மணி நேர கணக்கின்படி, இந்த விலையேற்றமானது 4 கிராம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

துபாய் ஜூவல்லரி குழுமத்தின் தரவுகளின்படி, இன்று காலையில் 22 காரட் வகை தங்கம் ஒரு கிராமுக்கு 268.25 திர்ஹம்ஸ் ஆகவும், 21 காரட் தங்கம் 259.5 திர்ஹம்ஸ் ஆகவும் விற்பனை செய்யப்பட்டது, அதேசமயம், 18 காரட் வகை தங்கம் 222.5 திர்ஹம்ஸ்க்கு வர்த்தகமானது.

ADVERTISEMENT

இந்நிலையில், ஸ்பாட் தங்கம் எனப்படும் விலைமதிப்பற்ற உலோகமானது, UAE நேரப்படி இன்று காலை 9.10 மணியளவில் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,391.93 டாலர் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது. உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT