ADVERTISEMENT

அரபு நாடுகளில் முதலிடம் பிடித்த அமீரகம்.. உலகளவில் ஐந்தாவது இடம்.. எதில் தெரியுமா..??

Published: 30 May 2024, 9:18 AM |
Updated: 30 May 2024, 9:18 AM |
Posted By: Menaka

சிறந்த சாலைத்தரத்தையும் சிறந்த சாலை உள்கட்டமைப்பையும் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகமானது சமீபத்தில் வெளியான தரவுகளில் உலகளவில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது ஐக்கிய அரபு அமீரகதானது சாலைத் தரத்தில் உலகில் ஐந்தாவது இடத்திலும் அரபு நாடுகளில் முதலிடத்திலும், பொதுப் போக்குவரத்தில் 10வது இடத்திலும் உள்ளதாக உலகப் பொருளாதார மன்றத்தால் (World Economic Forum) வெளியிடப்பட்ட பயண மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீடு 2024 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகமானது பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் செயல்திறனில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், துறைமுக சேவைகளின் செயல்திறனைப் பொறுத்தமட்டில், ஐக்கிய அரபு அமீரகம் உலகளவில் ஒன்பதாவது இடத்தையும், அரபு நாடுகளில் முதல் இடத்தையும் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமீரகத்தின் ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் முஹம்மது அல் மஸ்ரூயி பேசுகையில், இந்த முடிவுகள் புத்திசாலித்தனமான தலைமையின் முன்னோக்கு பார்வைக்குக் காரணம் என்றும், இவை அமீரகத்தின் நீண்ட கால மூலோபாயத் திட்டங்களின் நம்பகத்தன்மைக்கு சான்றாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறியதாவது: “இந்த சாதனைகள் பல்வேறு துறைகளில் எங்களின் செயல்திறன் மிக்க அணுகுமுறை மற்றும் மூலோபாய திட்டமிடலை பிரதிபலிக்கின்றன மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த மையமாக மாறும் நாட்டின் லட்சியத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம், அமீரகத்தின் முக்கிய துறைகளை மேம்படுத்துவதற்கும், வணிகம் மற்றும் ஓய்வுக்கான முன்னணி இடமாக நாட்டை  நிலைநிறுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளதாகக் குறிப்பிட்ட  அல் மஸ்ரூயி, உலகளாவிய பட்டியலில் அமீரகம் பிடித்துள்ள தரவரிசை, நம்பகமான வணிகச் சூழலுக்கான பார்வையில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க நேரடியாக பங்களிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தற்போது உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப்பட்ட பயண மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீடு 2024 அறிக்கையின் முடிவுகள், ஐக்கிய அரபு அமீரகமானது நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் மிக உயர்ந்த தரத்தை ஏற்றுக்கொள்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும், அமீரகமானது சாலைகள், பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் துறைமுக சேவைகளின் தரத்திற்கு ஒரு அளவுகோலாக மாறியுள்ளதாகவும் ஃபெடரல் போட்டித்திறன் மற்றும் புள்ளியியல் மையத்தின் இயக்குநர் ஹனன் மன்சூர் அஹ்லி தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel