ADVERTISEMENT

அபுதாபியில் தொடர்ச்சியாக மூடப்படும் உணவகங்கள்.. சமையலறையில் பூச்சிகள் காணப்பட்டதால் மற்றுமொரு உணவகத்தை மூட உத்தரவு..!!

Published: 8 Jun 2024, 11:26 AM |
Updated: 8 Jun 2024, 11:26 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ‘Desi Pak Punjab Restaurant’ என்கிற பெயரில் செயல்பட்டு வரும் உணவகம் உணவு தயாரிக்கும் இடத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்கத் தவறிய குற்றத்திற்காக உணவகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

அபுதாபி வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆணையத்தின் (ADAFSA) அதிகாரிகள் எமிரேட் முழுவதும் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு தரத்தை உறுதி செய்வதற்காக அவ்வப்போது சோதனை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், அபுதாபியில் செயல்பட்டு வந்த ‘Desi PAK Punjab’ உணவகத்தின் சமையலறையில் ஆய்வு செய்த அதிகாரிகள் பூச்சிகளை கண்டுபிடித்துள்ளனர், மேலும் மோசமான பொது சுகாதாரம் காணப்பட்டதால் உணவகத்தை மூடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையடுத்து, அந்த உணவகம் உணவு பாதுகாப்பு தரம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும் வரை மூடல் அமலில் இருக்கும் என்று ஆணையத்தின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமீரகத்தில் உள்ள உணவகங்களில் இதுபோன்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஏதேனும் கவலைகள் இருந்தால் 800555 என்ற ஹாட்லைன் மூலம் தெரிவிக்குமாறு ஆணையம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel