ADVERTISEMENT

துபாய்: ஈத் அல் அதா ரேஃபிள் டிராவில் 300,000 திர்ஹம்ஸ் மற்றும் தங்கம் வெல்லும் வாய்ப்பு!! எப்படி தெரியுமா??

Published: 16 Jun 2024, 6:04 PM |
Updated: 16 Jun 2024, 6:04 PM |
Posted By: Menaka

துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுமம் (DSMG) ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ஈத் அல் அதா ரேஃபிளை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதில் துபாய் முழுவதும் உள்ள 18 மால்கள் பங்கேற்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், இதில் பங்கேற்கும் மால்களில் ஷாப்பிங் செய்பவர்கள் இந்த ஈத் அல் அதாவின் போது 300,000 திர்ஹம்கள் வரையிலான பரிசுகளுடன் பல்வேறு ரேஃபிள் டிராக்களில் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக துபாய் ஷாப்பிங் மால்ஸ் குழுமம் (DSMG) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 18 மால்களில் ஒன்றில் 200 திர்ஹம்கள் செலவழிப்பவர்கள் டிஜிட்டல் ரேஃபிள் கூப்பனைப் பெறுவார்கள் என்றும், மேலும் 22 வெற்றியாளர்கள் ஈத் பண்டிகையின் அடுத்த மூன்று நாட்களில் 5,000 முதல் 15,000 திர்ஹம் வரையிலான பல்வேறு தொகைகளை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் பல பில்களை இணைப்பதன் மூலம், டிராவில் கூடுதல் நுழைவுகளைப் பெறலாம் மற்றும் தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பங்கேற்கும் மால்கள்

  1. அல் குரைர் சென்டர்,
  2. அல் கைல் கேட் கம்யூனிட்டி சென்டர்,
  3. அல் கூஸ் மால்,
  4. அரேபியன் சென்டர்,
  5. பே அவென்யூ மால்,
  6. சென்ட்ரல் மால்,
  7. செஞ்சுரி மால்,
  8. கிரவுன் மால்,
  9. துபாய் ஃபெஸ்டிவல் பிளாசா,
  10. ஜெபல் அலி மால்,
  11. மர்ஹாபா மால்,
  12. முடோன் கம்யூனிட்டி சென்டர்,
  13. செரீனா மார்க்கெட்ப்ளேஸ் ,
  14. ஷோரூக் கம்யூனிட்டி சென்டர்,
  15. சிலிக்கான் சென்ட்ரல் மால்,
  16. டைம்ஸ் ஸ்கொயர் சென்டர்,
  17. டவுன் மால் மற்றும்
  18. வில்லனோவா கம்யூனிட்டி மால்.

மோதேஷ் ரேஃபிள் டிரா (Modesh raffle draw)

மோதேஷ் கிராண்ட் ரேஃபிள் டிராவில் இருந்து மிகப்பெரிய பரிசும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ட்ரீம் துபாய் (dream dubai) செயலி மற்றும் இணையதளத்தில் 10 திர்ஹம் செலவில் மோதேஷ் ஷாப்பிங் கார்டை வாங்குபவர்கள் ஈத் கிராண்ட் பிரைஸ் ரேஃபிளில் 300,000 ரொக்கப் பணத்தை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்ஸ்பார்க் துபாய் (Boxpark dubai) மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் அல்லது டிரீம் துபாய் அப்ளிகேஷனில் உள்ள மோதேஷ் ஸ்டோரில் ஷாப்பிங் செய்வதன் மூலம் மோதேஷ் ஷாப்பிங் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

ADVERTISEMENT

கோல்டு ப்ரோமோஷன்:

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘Glittering City of Gold’ ரேஃபிள் டிராவும் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1,000 திர்ஹம்ஸ்  அல்லது அதற்கு மேல் செலவழித்து தங்கம் மற்றும் நகைகளை வாங்குபவர்கள் மொத்தமாக 100,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள நகைகளை வெல்வதற்கான டிராவில் நுழைவார்கள்.

அதுமட்டுமில்லாமல், ஷாப்பிங் செய்பவர்கள் தங்கம், வைரங்கள் மற்றும் முத்துக்கள் மீது 50 சதவீதம் வரை பெரும் தள்ளுபடியை அனுபவிக்கலாம், மேலும் ஜூலை 20 வரை துபாய் முழுவதும் பங்கேற்கும் 150 நகை விற்பனை நிலையங்களில் 1,000 திர்ஹம் அல்லது அதற்கு மேல் வாங்கினால் பரிசுகளைப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel