ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈத் அல் அதா பண்டிகையைக் கொண்டாட ஜூன் 15 முதல் ஜூன் 18 வரை என நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துபாய் முனிசிபாலிட்டியானது விடுமுறை நாட்களில் துபாயில் உள்ள குடியிருப்பு பூங்காக்கள், சிறப்பு பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்ட பொதுப் பூங்காக்கள் செயல்படும் நேரத்தை அறிவித்துள்ளது.
- அருகிலுள்ள பூங்காக்கள் மற்றும் பப்ளிக் ஸ்கொயர் – காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும்
- ஜபீல், அல் கோர், அல் மம்சார், அல் சஃபா மற்றும் முஷ்ரிஃப் பூங்காக்கள் – இரவு 8 மணி முதல் 11 மணி வரை செயல்படும்
- முஷ்ரிஃப் பூங்காவிற்குள் மவுண்டன் பைக் டிராக் மற்றும் வாக்கிங் டிரெய்ல் – காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறக்கப்படும்.
சிறப்பு பூங்காக்கள் / பொழுதுபோக்கு இடங்கள் செயல்படும் நேரம்:
- குரானிக் பார்க் – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- கேவ் ஆஃப் மிராக்கிள்ஸ் மற்றும் க்ளாஸ் ஹவுஸ் – காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
- துபாய் ஃபிரேம் – காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
- சில்ட்ரென்ஸ் சிட்டி – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை (திங்கள் மற்றும் செவ்வாய்); மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை (சனி மற்றும் ஞாயிறு)
மேலும், துபாய் முனிசிபாலிட்டி ஈத் அல் அதாவின் முதல் மற்றும் இரண்டாவது நாட்களில் சில்ட்ரென்ஸ் சிட்டியில் மாலை 4 மணி முதல் 7 மணி வரை வரைதல் அமர்வுகள் மற்றும் இனிப்புகள் விநியோகம் உட்பட பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel