ADVERTISEMENT

ஈத் அல் அதாவிற்காக துபாயில் நடத்தப்படும் கனான் ஃபயரிங்.. எங்கெங்கே..??

Published: 15 Jun 2024, 5:58 PM |
Updated: 15 Jun 2024, 5:58 PM |
Posted By: Menaka

இஸ்லாமியப் பெருமக்களால் கொண்டாடப்படும் தியாகத் திருநாளான ஈத் அல் அதாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் துபாய் முழுவதும் மிகப் பிரபலமான ஏழு இடங்களில் கனான் ஃபயரிங் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கனான் ஃபயரிங் எனும் பீரங்கிகளை சுடுவதன் மூலம் ஈத் அல் அதாவை அறிவிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று இதன் குழுவின் தளபதி லெப்டினன்ட் கர்னல் அப்துல்லா தாரிஷ் அல் அமிமி தெரிவித்துள்ளார். ஈத் தொழுகைக்குப் பிறகு அதிகாலை 5.45 மணியளவில் கனான் ஃபயரிங்கைக் காணக்கூடிய இடங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • ஜபீலில் உள்ள ஜபீல் கிராண்ட் மசூதி
  • உம் சுகீமில் ஈத் தொழுகை மைதானம்
  • நாத் அல் ஹமர்
  • அல் பர்ஷா
  • நாத் அல் ஷெபா
  • அல் பராஹா
  • ஹத்தா

ADVERTISEMENT

கனான் ஃபயரிங் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். புனித ரமலான் மாதத்தில், இஃப்தார் நேரத்தின் போது கனான் ஃபயரிங் நடத்தப்படும். அதேபோல், ஈத் அல் அதா மற்றும் ஈத் அல் பித்ர் பண்டிகையின் தொடக்கத்தை அறிவிப்பதற்காகவும் இது செய்யப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT