ADVERTISEMENT

ஈத் அல் அதா விடுமுறையில் விசா சேவைகளை எப்படி பெறுவது.? மையங்களின் இயக்க நேரத்தை வெளியிட்டுள்ள GDRFA..!!

Published: 15 Jun 2024, 4:17 PM |
Updated: 15 Jun 2024, 4:17 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் குடியிருப்பாளர்களுக்கு இஸ்லாமியப் பண்டிகைத் திருநாளான ஈத் அல் அதாவைக் கொண்டாட இன்று ஜூன் 15 முதல் 18 வரை விடுமுறையை அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த விடுமுறை நாட்களிலும் குடியிருப்பு விசா மற்றும் நுழைவு அனுமதி தொடர்பான விசா சேவைகள் கிடைக்கும் என்று துபாய் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், துபாயின் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) ஜூன் 15 முதல் 18 வரை எமிரேட்டில் உள்ள குடியிருப்பு விசா மற்றும் நுழைவு அனுமதி தொடர்பான விசா சேவை மையங்களின் இயக்க நேரத்தைப் பட்டியலிட்டுள்ளது.

>> துபாய் சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 3 இன் அரைவல் ஹாலில் அமைந்துள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் 24/7 சேவைகளை தொடர்ந்து வழங்கும்.

ADVERTISEMENT

>> அல் அவீர் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம் விடுமுறை முழுவதும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

>> வாடிக்கையாளர்கள் GDRFA இன் பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் Amer அழைப்பு மையத்திற்கு 8005111 என்ற கட்டணமில்லா எண்ணில் தெரிவிக்கலாம், அதுவும் 24/7 செயல்படும்.

ADVERTISEMENT

இது தவிர, Dubai Now ஆப் அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://www.gdrfad.gov.ae) உள்நுழைந்து தங்கள் பரிவர்த்தனைகளை தடையின்றி முடிக்குமாறும் துபாயின் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel