உலகில் உள்ள பல்வேறு நாட்டினரும் வந்து தங்குவதற்கும் வாழ்வதற்கும் சிறந்த இடமாக ஐக்கிய அரபு அமீரகம் திகழ்கிறது. மக்களின் பாதுகாப்பிற்கும் தனியுரிமைக்கும் முக்கியத்துவம் அளித்து அமீரகம் விளங்குவதால் இரவு நேரங்களில் கூட பெண்கள் தனியாக நடமாடுவதற்கு சிறந்த நாடாக அமீரகம் இருந்து வருகிறது. அதே போல் எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் ஒரு ஆப் அல்லது கால் சென்டர் மூலம் எளிதாக பெண்கள் மட்டும் பயணிக்கக் கூடிய டாக்ஸியையும் அமீரகத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அமீரகம் முழுவதும் பெண்கள் மற்றும் குடும்பங்கள் மட்டும் செல்லும் டாக்ஸியை பதிவு செய்வது எப்படி என்பதற்கான முழு வழிகாட்டியும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
1. அபுதாபி
அபுதாபியில் உள்ள ‘family taxi’ குடும்பங்களுக்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டு பயிற்சி பெற்ற பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படுகிறது. இந்த டாக்ஸிகள் வெள்ளை கூரையுடன் (white roof) அடையாளம் காணப்படுகின்றன. அபுதாபி மற்றும் அல் அய்னில், இந்த டாக்சிகள் பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களை மட்டுமே ஏற்றிச் செல்கின்றன.
எமிரேட்டின் பொது போக்குவரத்து ஆணையமான ‘அபுதாபி மொபிலிட்டி’ மூலம் நீங்கள் இந்த டாக்ஸியை முன்பதிவு செய்யலாம். மேலும், கால் சென்டர் எண் 600 53 53 53 மற்றும் அவர்களின் அதிகாரப்பூர்வ டாக்ஸி புக்கிங் செயலியான ‘அபுதாபி டாக்ஸி’ மூலமாகவும் முன்பதிவு செய்யலாம்.
- டாக்ஸியை முன்பதிவு செய்ய, அப்ளிகேஷனைத் திறந்து, உங்கள் மொபைல் நம்பரை உள்ளிட்டு, SMS மூலம் உங்களுடன் பகிரப்பட்ட OTPயை உள்ளிட்டு உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும். பின்னர், உங்கள் பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் இடங்களை உள்ளிட்டு, ‘family taxi’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதில் பயணத்தை பின்னர் திட்டமிட அல்லது டாக்ஸியை இப்போதே முன்பதிவு செய்ய உங்களுக்கு விருப்பம் இருக்கும். உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அல்லது உங்கள் ஸ்மார்ட்போனின் வாலட் ஆப் மூலம் ஆன்லைனில் கட்டணத்தைச் செலுத்தலாம்.
அபுதாபியில் பெண்கள் மட்டும் செல்லும் டாக்சிகளுக்கான கட்டண விவரம் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்கள் தோராயமானவை. பயணத்தின் முடிவில் டாக்ஸி மீட்டரின் படி உண்மையான கட்டணம் வசூலிக்கப்படும்.
- தொடக்கக் கட்டணம் – பகல்நேரங்களில் 5 திர்ஹம்ஸ் மற்றும் இரவுநேரங்களில் 5.50 திர்ஹம்ஸ்
- ஒவ்வொரு கிமீ – 1.82 திர்ஹம்ஸ்
- காத்திருப்பு கட்டணம் – நிமிடத்திற்கு 50 ஃபில்ஸ்
- முன்பதிவு கட்டணம் – 4 திர்ஹம்ஸ் (பகல்நேரம்) மற்றும் 5 திர்ஹம்ஸ் (இரவுநேரம்)
- குறைந்தபட்ச பயணக் கட்டணம் – 12 திர்ஹம்ஸ்
- விமான நிலையத்தில் இருந்து தொடக்கக் கட்டணம் – 20 திர்ஹம்ஸ்(சிறிய வாகனங்கள்)
- விமான நிலையத்தில் இருந்து தொடக்கக் கட்டணம் – 25 திர்ஹம்ஸ் (பெரிய வாகனங்கள்)
2. துபாய்
துபாயில், பெண்கள் மட்டும் மற்றும் குடும்பத்துடன் பயணிக்கக் கூடிய டாக்சிகள் பெண் ஓட்டுநர்களால் இயக்கப்படுகின்றன, மேலும் வாகனத்தின் கூரை (vehicle roof) பிங்க் நிறத்தில் இருப்பதால் அவை பொதுவாக ‘பிங்க் டாக்ஸி’ என்றும் குறிப்பிடப்படுகின்றன. துபாயில் உள்ள எந்த தெருவிலும், மால்கள் அல்லது ஹோட்டல்களிலும் நீங்கள் இந்த டாக்ஸியைப் பெறலாம். துபாய் சர்வதேச விமான நிலைய முனையம் 1, 2 மற்றும் 3 மற்றும் போர்ட் ரஷித் ஆகியவற்றிலும் இந்த டாக்ஸியில் உடனடியாகக் கிடைக்கின்றன.
மாற்றாக, துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) S’hail மொபைல் செயலி மூலமாகவோ அல்லது துபாய் டாக்ஸி நிறுவனத்தின் (DTC) கால் சென்டர் நம்பர் 800 88088 மூலமாகவோ டாக்ஸியை ஆன்லைனில் பதிவு செய்யலாம். டாக்ஸியை முன்பதிவு செய்ய, S’hail அப்ளிகேஷனை திறந்து, பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் இடத்தை உள்ளிடவும். ‘பிங்க் டாக்ஸி’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கட்டணத்தை ஆன்லைனில் அல்லது பயணத்தின் முடிவில் பணமாக செலுத்தலாம்.
கட்டண விவரம்
- அடிப்படை கட்டணம் – 12 திர்ஹம்ஸ்
- ஒரு கிலோமீட்டருக்கு (கிமீ) வீதம் – 2.09 திர்ஹம்ஸ்
Street hail
- பகல் நேரங்களில் அடிப்படைக் கட்டணம் – 5 திர்ஹம்ஸ்
- பகல் நேரங்களில் ஒரு கிமீ வீதம் – 2.21 திர்ஹம்ஸ்
- இரவு நேர அடிப்படைக் கட்டணம் – 5.50 திர்ஹம்ஸ்
- இரவு நேரம் ஒரு கிமீ வீதம் – 2.21 திர்ஹம்ஸ்
விமான நிலையத்தில் இருந்து
- அடிப்படை கட்டணம் – 25 திர்ஹம்ஸ்
- ஒரு கிமீ வீதம் – 2.21 திர்ஹம்ஸ்