ADVERTISEMENT

துபாயில் குறைந்த கட்டணத்தில் நாள் முழுவதும் பார்க்கிங் செய்வது எப்படி??

Published: 7 Jun 2024, 2:01 PM |
Updated: 7 Jun 2024, 2:01 PM |
Posted By: Menaka

துபாயில் வசிக்கும் நபர்கள் தங்களின் வாகனங்களை ஒரு நாள் முழுவதுமாக நிறுத்தி வைக்க விரும்பினால் அதற்கான தகுந்த கட்டண பார்க்கிங் இடத்தைப் பயன்படுத்தத் திட்டமிடுகிறீர்களா? உங்கள் காரில் இருந்து இறங்காமலேயே மலிவான பார்க்கிங் மண்டலங்களைத் தேடுவதற்கு துபாயில் எளிதான வழி உள்ளது. நீங்கள் சிரமமின்றி உங்கள் பார்க்கிங் டிக்கெட்டைப் புதுப்பிக்கவும், கட்டண பார்க்கிங் மண்டலங்களில் (paid parking zone) பணத்தைச் சேமிக்கவும் வழிமுறைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

‘DubaiNow’ அப்ளிகேஷன்:

  1. உங்கள் மொபைலில் DubaiNow அப்ளிகேஷனை திறந்து, UAE Pass ஐப் பயன்படுத்தி உள்நுழையவும்.
  2. ‘driving’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ‘parking’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் மொபைலில் லொக்கேஷனை அணுகுவதற்கு அப்ளிகேஷனிற்கு அனுமதி வழங்கியிருந்தால், ஆப்ஸ் உங்களைச் சுற்றியுள்ள கட்டண பார்க்கிங் மண்டலங்களை (paid parking zones) மேப்பில் முன்னிலைப்படுத்தும். ஒவ்வொரு மண்டலத்தின் பார்க்கிங் குறியீட்டைக் கண்டறிய உங்கள் பின்னை நகர்த்தவும். நீங்கள் பார்க்க வேண்டியது மண்டலம் D. இவை பொதுவாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) பார்க்கிங்கிற்காக ஒதுக்கப்பட்ட பணம் செலுத்தும் பார்க்கிங் இடங்களாகும். பார்க்கிங் கட்டணமாக 14 மணிநேர பார்க்கிங்கிற்கு 10 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படும். அதாவது இந்த மண்டலத்தில் பணம் செலுத்தும் பார்க்கிங் நேரம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை (14 மணி நேரம்).
  4. மேலும், உங்கள் கிரெடிட் கார்டு, ஆப்பிள் பே அல்லது SMS மூலம் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தலாம்.

parking fees per zone

RTA அப்ளிகேஷன்

1. உங்கள் மொபைலில் ‘RTA Dubai’ அப்ளிகேஷனை திறக்கவும். UAE PASS அல்லது உங்கள் RTA ஆன்லைன் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும்.

ADVERTISEMENT

2. அதில் காணப்படும் டாஷ்போர்டில் உள்ள ‘Parking’ என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் மொபைலில் லொக்கேஷன் சேவைகளுக்கான அணுகலை நீங்கள் வழங்கியிருந்தால், ஆப்ஸால் உங்கள் இருப்பிடத்தைத் தீர்மானிக்க முடியும்.

3. மேலே குறிப்பிட்டுள்ளபடி, அப்ளிகேஷன் உங்களைச் சுற்றியுள்ள கட்டண பார்க்கிங் மண்டலங்களை முன்னிலைப்படுத்தும். ஒவ்வொரு மண்டலத்தின் பார்க்கிங் குறியீட்டைக் கண்டறிய உங்கள் பின்னை நகர்த்தவும் மற்றும் மண்டலம் D ஐத் தேடவும். இவை பொதுவாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) பார்க்கிங்கிற்காக ஒதுக்கப்பட்ட பிளாட்டுகளுக்குள் பணம் செலுத்தும் பார்க்கிங் இடங்களாகும். 14 மணிநேர பார்க்கிங்கிற்கு 10 திர்ஹம்ஸ் பார்க்கிங் கட்டணம் ஆகும். ஏனெனில் இந்த மண்டலத்தில் பணம் செலுத்தும் பார்க்கிங் நேரம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை (14 மணி நேரம்).

ADVERTISEMENT

இது தவிர, RTA செயலி மூலம், நீங்கள் கூடுதல் அம்சத்தையும் பெறலாம், இதில் AI கணிப்பு அடிப்படையில் மண்டலத்தில் உள்ள மொத்த இடங்களை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். மேலும் உங்கள் கிரெடிட் கார்டு, RTA வாலட் அல்லது ஆப்பிள் பே மூலம் பார்க்கிங்கிற்கு பணம் செலுத்தலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel