ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று தூசிக்கான மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்ட வானிலை மையம்.. வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை…!!

Published: 10 Jun 2024, 11:22 AM |
Updated: 10 Jun 2024, 11:22 AM |
Posted By: Menaka

இன்றைய தினம் (ஜூன் 10, திங்கட்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு மேகமூட்டமான வானிலை காணப்படும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவிப்பு வெளியிட்டதுடன் அமீரகத்தில் இன்று பலவலாக தூசி புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. NCM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பரவலான பகுதிகளில் இன்று இரவு 8 மணி வரை தூசி மற்றும் மணலால் கிடைமட்டத் தெரிவுநிலை குறையும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ள X தள பதிவில், அபுதாபியில் தூசி நிறைந்த சூழ்நிலைகள் காரணமாக, சாலைகளில் தெரிவுநிலை குறைந்துள்ளதால், ஓட்டுநர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், கவனம் சிதறாமல் வாகனம் ஓட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், நாட்டின் உள் பகுதிகளில் இன்று அதிகபட்சமாக 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும், அபுதாபி மற்றும் துபாயில் முறையே 44ºC மற்றும் 43ºC வரை வெப்பநிலை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், Mezaira மற்றும் Gasyoura இல் ஈரப்பதத்தின் அளவுகள் 75 சதவீதம் மற்றும் 60 சதவீதம் வரை அடையும் என்று மையம் கூறியுள்ளது. அவ்வப்போது லேசானது முதல் மிதமான காற்று வீசுவதுடன் சிலசமயங்களில் காற்று வலுப்பெறும் என்பதால் தூசி மற்றும் மணலுடன் கூடிய புழுதி காற்றை எதிர்பார்க்கலாம். அதேசமயம், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதியில் கடலின் நிலைமை சற்று மிதமாக இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஃபுஜைரா, அல் அய்ன் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel