ADVERTISEMENT

அபுதாபி: ஜூன் 2 வரை பகுதியளவு மூடப்படும் ஷஹாமா, மஃப்ரக் இடையேயான E11 சாலை..!! வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு..!!

Published: 1 Jun 2024, 8:32 AM |
Updated: 1 Jun 2024, 8:32 AM |
Posted By: Menaka

அபுதாபியில் உள்ள ஷேக் மக்தூம் பின் ராஷித் சாலை (E11) நேற்று வெள்ளிக்கிழமை (மே 31) இரவு முதல் இரண்டு நாட்களுக்கு பகுதியளவு மூடப்படும் என்று அபுதாபி மொபிலிட்டி தனது X தளத்தில் அறிவித்துள்ளது. அதன்படி இந்த சாலை மூடல் நேற்றிரவு 11 மணி முதல் ஜூன் 2, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அரசு அதிகாரம் சமூக ஊடக தளமான X இல் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, துபாயிலிருந்து அபுதாபி வழியாக சவுதி அரேபியா நோக்கி செல்லும் ஷேக் மக்தூம் பின் ராஷித் சாலை (E11) சாலையில், ஷஹாமா மற்றும் அல் மஃப்ரக் பாலத்திற்கு இடையே இரண்டு இடது பாதைகள் மூடப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், அபுதாபி மொபிலிட்டி வெளியிட்ட அறிவிப்பின்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்ட பாதைகள் மூடப்படும் எனவும், அதே சமயம் பச்சை நிறத்தில் உள்ள பாதைகள் வழக்கம் போல செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் குறிப்பிட்ட இவ்விடத்தில் சிறிது தாமதத்தை எதிர்பார்க்கலாம்.

ADVERTISEMENT

அத்துடன், அபுதாபியில் பனியாஸிற்கு அருகே உள்ள மதீனத் அல் ரியாத் சிட்டியின் அல் புரூக் தெருவில் அமைக்கப்பட்டு வந்த புதிய போக்குவரத்து சிக்னல்கள் இன்று சனிக்கிழமை (ஜூன் 1) முதல் செயல்படும் என்றும் அபுதாபி மொபிலிட்டி தனது X தளத்தில் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel