ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் தொடங்கியதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸை நெருங்கி வருகின்றது. வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது வாகனம் ஓட்டுவது சில சமயங்களில் ஆபத்தான சூழலுக்கு வழுவகுக்கும். எனவே வாகன ஓட்டிகள் குறிப்பாக கோடைகாலத்தின் போது மிகவும் கவனமாக இருக்குமாறு துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து RTA வெளியிட்ட அறிக்கையில், கோடைக்கால வெயிலுக்கு மத்தியில் வாகனங்கள் திடீரென பழுதாவதைத் தவிர்க்க ஓட்டுநர்கள் வெளியே செல்வதற்கு முன் தங்கள் வாகனங்களை எப்போதும் பரிசோதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதனால், திடீர் இயந்திரக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கவும், போக்குவரத்து விபத்துகளைத் தடுக்கவும் முடியும் என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக துபாய் எமிரேட் முழுவதும் நடத்தப்படும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கோடைகாலத்தில் பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு வழிகாட்டுதலைப் பகிர்ந்துள்ள ஆணையம், பின்வருவனவற்றின் நிலைகளை சரிபார்க்கும்படி வாகன ஓட்டுகளை கேட்டுக்கொண்டுள்ளது.
- டயர்கள்
- பிரேக்குகள்
- இன்ஜின் ஆயில்
- AC
- ஏர் கண்டிஷனிங் அமைப்புகள்
- பேட்டரிகள்
- விளக்குகள்
- கண்ணாடி வைப்பர்
அத்துடன், வாகன உரிமங்களைப் புதுப்பிக்கும்போது வருடாந்திர வாகன ஆய்வுகள் RTA சோதனை மையங்களில் மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு முழுவதும் தங்கள் வாகனங்களின் வழக்கமான சோதனைகளைச் செய்வது ஓட்டுநர்களின் பொறுப்பு என்றும் அதிகாரம் வலியுறுத்தியுள்ளது.
அமீரகத்தில் வெப்பநிலை அரை சதத்தை தொடவிருக்கும் நிலையில், RTA இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மேலும், இந்த முயற்சியானது உள்துறை அமைச்சகத்தின் ‘Safe Summer’ இயக்கத்தின் ஒரு அங்கம் எனவும் RTA குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே 31ம் தேதி அன்று, அல் அய்னில் வெப்பநிலை 49.2 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel