ADVERTISEMENT

துபாயில் சம்மர் சீசனை முன்னிட்டு மூடப்படும் பிரபல குடும்ப பொழுதுபோக்கு இடங்கள்!!

Published: 5 Jun 2024, 4:37 PM |
Updated: 5 Jun 2024, 4:37 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலம் தொடங்குவதால், துபாயில் உள்ள சில பிரபலமான குடும்ப பொழுதுபோக்கு இடங்கள் வெயில் அதிகரிப்பதை முன்னிட்டு மூடப்படுவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே, வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே திறக்கப்பட்ட துபாயின் பன்முகக் கலாச்சார பூங்காவான குளோபல் வில்லேஜ் சீசன் 28, ஒரு வாரத்திற்கு நீட்டிப்பை அறிவித்த பிறகு கடந்த மே 5ஆம் தேதி அன்று மூடப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வரிசையில், தற்போது மேலும் மூன்று முக்கிய சுற்றுலா தலங்கள் கோடையை முன்னிட்டு மூடுவதாக அறிவித்துள்ளன. தற்பொழுது மூடப்படும் இந்த பொழுதுபோக்கு இடங்கள் மீண்டும் குளிர்காலம் ஆரம்பிக்கும் நேரத்தில் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் மூடப்படவுள்ள முக்கிய இடங்களின் பட்டியல் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

1. துபாய் சஃபாரி

துபாயில் ஆயிரக்கணக்கான பல்வேறு விலங்குகளைக் கொண்டிருக்கும் குடும்ப பொழுதுபோக்கு இடமான துபாய் சஃபாரியானது கடந்த ஜூன் 2, 2024 அன்று மூடப்பட்டது.

ADVERTISEMENT

2. அல் வாசல் பிளாசா, எக்ஸ்போ 2020

எக்ஸ்போ 2020ன் பார்க்க வேண்டிய மிக அற்புதமான இடங்களில் ஒன்றான அல் வாஸ்ல் பிளாசா விரைவில் அதன் கதவுகளை மூடவுள்ளது. மேலும், நீர் மற்றும் ஆற்றலைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் சர்ரியல் நீர் அம்சமும் (surreal water feature) மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

3. துபாய் மிராக்கிள் கார்டன்

பல்லாயிரக்கணக்கான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை கவர்ந்திழுக்கும் துபாய் மிராக்கிள் கார்டனில் உள்ள மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சிற்பங்களை குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து இன்னும் ஒரு சில நாட்களுக்கு அனுபவிக்க முடியும். பின் மிராக்கிள் கார்டன் ஜூன் 15 ஆம் தேதி சீசனுக்கு மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel