ADVERTISEMENT

அபுதாபியில் மெதுவாக வாகனம் ஓட்டியதால் அபராதம் பெற்ற 3 லட்சம் ஓட்டுநர்கள்..!! தலா ஒருவருக்கு 400 திர்ஹம்ஸ் அபராதம்..!!

Published: 4 Jun 2024, 9:52 AM |
Updated: 4 Jun 2024, 10:07 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் போக்குவரத்து சட்டங்கள் மிக கடுமையாக இருக்கும் என்பதும் அதனை மீறும் நபர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்பதும் அமீரகத்தில் வசிக்கும் நபர்கள் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இருந்த போதிலும் ஒரு சில நேரங்களில் பார்க்கிங் விதிகளை மீறுதல், வேகமாக செல்லுதல் போன்ற காரணங்களால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது அபராதங்களை சந்திக்க நேரிடுகிறது.

ADVERTISEMENT

இது ஒருபுறமிருக்க கடந்த ஆண்டில், அமீரக சாலைகளில் குறைந்தபட்ச வேக வரம்பை விட குறைவான வேகத்தில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக மட்டுமே சுமார் 300,147 வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. போக்குவரத்து விபத்துகள் குறித்த உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாறு சாலைகளில் மெதுவாக வாகனம் ஓட்டுவது பல்வேறு விபத்துக்களுக்கு பங்களித்தது என்று எமரத் அல் யூம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமீரக தலைநகரான அபுதாபியில் போக்குவரத்து விபத்துகளைத் தடுக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும் கடந்த மே 2023 இல் அபுதாபி ஷேக் முகமது பின் ரஷித் சாலையின் இரு திசைகளிலும் முதல் இரண்டு பாதைகளில் குறைந்த பட்ச வேக வரம்பாக மணிக்கு 120 கிமீ வேக வரம்பு அமல்படுத்தப்பட்டது. அபுதாபியில் உள்ள இந்த பிரதான நெடுஞ்சாலையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ ஆகும், மேலும் இடதுபுறத்தில் இருந்து முதல் மற்றும் இரண்டாவது பாதைகளில் குறைந்தபட்ச வேகம் மணிக்கு 120 கிமீ ஆகும்.

ADVERTISEMENT

இந்த சாலைகளில் குறைந்த பட்ச வேகத்தை கடைபிடிக்காமல் மெதுவாக சென்ற வாகன ஓட்டிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறைந்தபட்ச வேகம் குறிப்பிடப்படாத மூன்றாவது பாதையில் மெதுவாக செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கனரக வாகனங்கள் எப்பொழுதும் சாலையின் கடைசிப் பாதையைப் பயன்படுத்த வேண்டும், குறைந்தபட்ச வேக விதியை இது உள்ளடக்காது.

அத்துடன், வாகனங்களுக்கு இடையில் போதிய தூரத்தை பராமரிக்காமல் இருந்தாலும் அது குற்றமாகும், இது 400 திர்ஹம்ஸ் அபராதத்திற்கு வழிவகுக்கும். குறிப்பாக, அபுதாபியில் உள்ள டெயில்கேட்டிங் ரேடார்கள், வேகமாக செல்லக்கூடிய பாதையில் மெதுவாக செல்லும் வாகனங்கள் இருந்தால், முன்னும் பின்னும் உள்ள இரண்டு வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கும். இருப்பினும், பின்னால் உள்ள வாகனம் கூடுதலாக நான்கு ப்ளாக் பாயிண்ட்களை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel