ADVERTISEMENT

அபுதாபி: உணவுப் பாதுகாப்பு விதிகளை மீறிய 2 உணவகங்களை மூடிய ஆணையம்!!

Published: 29 Sep 2024, 9:03 PM |
Updated: 29 Sep 2024, 9:03 PM |
Posted By: Menaka

அமீரக தலைநகர் அபுதாபியில் உணவகங்களில் நடைபெறும் விதிமீறல்கள் குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்வதுடன் தகுந்த நடவடிக்கைகளையும் எடுத்து வரும் பட்சத்தில் அபுதாபியில் உள்ள 2 உணவகங்களில் சமீபத்தில் உணவு பாதுகாப்பு மீறல்கள் கண்டறியப்பட்டதால் அவற்றை மூட உத்தரவிட்டதாக அபுதாபி வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் (ADAFSA) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியின் முசாஃபா இண்டஸ்ட்ரியல் சிட்டியில் அமைந்துள்ள ‘கௌகாப் ஜுஹல்’ மற்றும் முகமது பின் சையத் சிட்டியில் உள்ள ‘பானூர்’ ஆகிய இரண்டு உணவகங்களும் உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறியதாகவும், அவற்றின் உணவு தயாரிக்கும் நடைமுறைகள் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் கண்டறியப்பட்டதால் உணவகங்களை ஆணையம் மூடியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், அபுதாபியில் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ஒரு உணவகம் ஆணையத்தால் மூடப்பட்டது. ஜூலை மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களை வழங்கியதற்காகவும் மற்ற சுகாதார விதிமுறைகளை மீறியதற்காகவும் இரண்டு உணவகங்கள் மூடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel