ADVERTISEMENT

UAE: க்ரூஸ் கன்ட்ரோலை இழந்த மற்றுமொரு கார்..!! பிரதான சாலையில் தவித்த ஓட்டுநரைக் காப்பாற்றிய காவல்துறையினர்..!!

Published: 8 Sep 2024, 2:38 PM |
Updated: 8 Sep 2024, 4:12 PM |
Posted By: Menaka

சமீப காலமாக க்ரூஸ் கன்ட்ரோல் என்று சொல்லக்கூடிய தானியங்கி வாகன இயக்கம் எனும் அமைப்பானது ஒரு சில வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது வாகன ஓட்டிக்கு வேலையை எளிதாக்கினாலும் ஒரு சில சமயங்களில் இது பழுதடைந்து விடுவதால் திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றது. இது போன்ற சம்பவங்கள் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் இருமுறை நடந்தேறிய நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு வாகனம் க்ரூஸ் கன்ட்ரோலால் பாதிப்பிக்குள்ளாகியுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் உள்ள பிரதான சாலையில் வாகன ஓட்டி ஒருவர் தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றிருந்த போது காரின் க்ரூஸ் கன்ட்ரோல் எனப்படும் தானியங்கி வாகன இயக்கம் திடீரென பழுதாகியுள்ளது. இதனால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், உடனடியாக உதவி கேட்டு துபாய் காவல்துறைக்கு அழைத்ததும் அதிகாரிகள் விரைந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

அந்த ஓட்டுநர் அவசர உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது காரின் க்ரூஸ் கன்ட்ரோல் பழுதாகிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சில நிமிடங்களில் விரைந்து சென்று பதிலளித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்த அறிக்கையில் துபாயில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் ஷேக் முகமது பின் சையத் சாலையில் எக்ஸ்போ பாலத்தை கடந்து சென்ற அந்த வாகனத்தைக் கண்ட போக்குவரத்து ரோந்துப் படையினர் விரைந்து சென்று காரைச் சுற்றியுள்ள பகுதியைப் பாதுகாத்து, கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால் ஏற்படக்கூடிய கடுமையான விபத்தைத் தவிர்த்துள்ளதாக நடவடிக்கை விவகாரங்களுக்கான உதவி கமாண்டன்ட் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் இச்சம்பவம் குறித்து விவரிக்கையில், அதிவேக சாலையில் வாகனத்தின் அபரிமிதமான அபாயத்தைக் கருத்தில் கொண்டு, ரோந்துப் படையினர் அதைச் சுற்றியுள்ள பகுதியை விரைவாகப் பாதுகாத்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகைகளை செயல்படுத்தியதாகவும், ரோந்துப் படையினரில் ஒருவர் வாகனத்தின் முன் நின்றுகொண்டு படிப்படியாக அதை நிறுத்தத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உங்கள் கார் கட்டுப்பாட்டை இழந்தால் என்ன செய்வது?

இதுபோல, வாகன ஓட்டிகள் தங்கள் காரின் க்ரூஸ் கன்ட்ரோல் பழுதடையும் சூழ்நிலையை எதிர்கொண்டால் முதலில் பயப்படுவதைத் தவிர்த்து, அமைதியாக இருக்குமாறு அல் மஸ்ரூயி எடுத்துரைத்துள்ளார்.

பின்னர், வாகன ஓட்டிகளின் சீட் பெல்ட் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும், அபாய விளக்குகள் (hazard light) மற்றும் ஹெட்லைட்களை ஆன் செய்யவும், மேலும் அவசர எண்ணை (999) உடனடியாக தொடர்பு கொண்டு இதுபோன்ற சூழ்நிலையைப் புகாரளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

ஒரு க்ரூஸ் கன்ட்ரோல் செயலிழப்பை சமாளிக்க, கியரை நடுநிலைக்கு (N) மாற்றி, இன்ஜினை அணைத்து, உடனடியாக காரை மறுதொடக்கம் செய்யும்படியும் அல் மஸ்ரூயி வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளார்.

அதுவும் சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால், வாகனம் முழுமையாக நிறுத்தப்படும் வரை இயக்கி பிரேக்குகளில் உறுதியான, நிலையான அழுத்தத்தைப் பயன்படுத்த வேண்டும். அது தோல்வியுற்றால், ஸ்டீயரிங் மீது உறுதியான பிடியைப் பராமரிக்கும் போது அவர்கள் படிப்படியாக ஹேண்ட்பிரேக்கை வெளியிட வேண்டும். மேற்கூறிய அனைத்து முயற்சிகளும் தோல்வியுற்றால், கட்டுப்பாட்டை மீட்டெடுக்க,  நடுநிலை (N) மற்றும் டிரைவ் (D) இடையே பரிமாற்றத்தை மாற்றியமைக்க வேண்டும்.

போக்குவரத்து ரோந்து வருவதற்கு முன்பு இந்த முறைகளில் ஏதேனும் வேலை செய்தால், ஓட்டுநர் பாதுகாப்பாக வாகனத்தை சாலையில் இருந்து விலகி வாகனத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel