ADVERTISEMENT

துபாயில் விரைவில் தொடங்கும் குளோபல் வில்லேஜ் சீசன் 29..!! திறக்கப்படும் தேதியை அறிவித்த நிர்வாகம்..!!

Published: 2 Sep 2024, 5:40 PM |
Updated: 2 Sep 2024, 5:40 PM |
Posted By: Menaka

துபாயின் பிரபலமான பன்முகக் கலாச்சார வெளிப்புற இலக்கான குளோபல் வில்லேஜ் கோடைகாலத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருக்கும் நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் 16ஆம் தேதி குளோபல் வில்லேஜின் 29-வது சீசன் தொடங்கும் என்று குளோபல் வில்லேஜ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த சீசன் மே 11, 2025 வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய சீசனில் 10 மில்லியன் பார்வையாளர்களை வரவேற்று புதிய சாதனை படைத்த குளோபல் வில்லேஜ், புதிய சீசனில் இதுவரை கண்டிராத பொழுதுபோக்கு மற்றும் அற்புதமான உள்கட்டமைப்பு மேம்படுத்தல்களைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர் மற்றும் சுமார் 40,000 நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சவாரிகள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் 3,500 கடைகள் மற்றும் 250 சாப்பாட்டு விருப்பங்களும் இடம்பெற்றிருந்தன.

ADVERTISEMENT

உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்து மிகவும் புகழ்பெற்ற பொழுதுபோக்கு தலமாக விளங்கும் குளோபல் வில்லேஜில் பொதுவாக மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு டிக்கெட் இலவசமாகும். மேலும் கடந்த சீசனில் ‘Value’ மற்றும் ‘Any day’ போன்ற சிறப்பு டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT