ADVERTISEMENT

அபுதாபி ஏர்போர்ட்டில் பார்க்கிங் செய்வது இனி ரொம்ப ஈஸி.. பார்க்கிங்கை எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்..!! கட்டண விபரங்கள் என்ன…??

Published: 24 Sep 2024, 8:54 PM |
Updated: 24 Sep 2024, 8:56 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் பொதுவாக விமான நிலையத்திற்கு செல்லும் நபர்களை பொறுத்தவரை தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கென்றே குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். அதுவும் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்வதற்காக விமான நிலையம் வந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் பார்க்கிங் கிடைக்காத போது நமக்கு ஏற்படும் பதற்றத்திற்கு அளவே இருக்காது. அதிலும் சிலர் நீண்ட கால விடுமுறைக்கு செல்லும் போது தங்கள் வாகனங்களை வசதியாக விமான நிலையத்திலேயே பார்க்கிங் செய்து விட்டு செல்வதும் உண்டு.

ADVERTISEMENT

இவற்றினை கருத்தில் கொண்டு அபுதாபியில் உள்ள சையத் சர்வதேச விமான நிலையம் இப்போது நீண்ட கால பார்க்கிங்கிற்கான குறைந்த கட்டணத்தை வழங்குகிறது, குறிப்பாக புறப்படும் பகுதியிலிருந்து இரண்டு நிமிடங்களில் பார்க்கிங் வசதி உள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் இடத்திற்கு உத்தரவாதம் அளிக்கவும், கடைசி நிமிட இடையூறுகளைத் தவிர்க்கவும், தங்கள் பார்க்கிங்கை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அபுதாபியில் விமான நிலைய பார்க்கிங் கட்டணம் எவ்வளவு, பார்க்கிங்கை முன்பதிவு செய்வது எப்படி போன்ற விபரங்களைப் பின்வருமாறு பார்க்கலாம்:

ADVERTISEMENT

பார்க்கிங் கட்டணம்:

சையத் சர்வதேச விமான நிலைய இணையதளத்தின்படி, தற்போதைய பார்க்கிங் கட்டணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • 225 திர்ஹம்ஸ் – 2 முதல் 3 நாட்கள்
  • 325 திர்ஹம்ஸ் – 4 முதல் 7 நாட்கள்
  • 400 திர்ஹம்ஸ் – 8 முதல் 14 நாட்கள் 14 நாட்களுக்கு மேல் தங்கினால், 15 ஆம் நாள் முதல் அதிகபட்சம் 30 நாட்கள் வரை ஒரு நாளைக்கு 50 திர்ஹம் என கட்டணம் வசூலிக்கப்படும்.

பார்க்கிங்கை முன்பதிவு செய்வது எப்படி?

  1. முதலில் parking.zayedinternationalairport.ae என்ற போர்டலுக்குச் சென்று, உங்கள் பயணத் தேதிகள், மதிப்பிடப்பட்ட வருகை மற்றும் திரும்பும் நேரத்தை உள்ளிடவும். மேலும் தொடர CAPTCHA சரிபார்ப்பை முடிக்கவும்.
  2. பின்னர், உங்களுக்கு கிடைக்கக்கூடிய பார்க்கிங் இடம், கட்டணம் மற்றும் கட்டண விருப்பங்களை கணினி காண்பிக்கும். நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்த தேவையில்லை. லாபி அல்லது வெளியேறும் பாதையில் அமைந்துள்ள தானியங்கி இயந்திரங்களில் பணம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
  3. அடுத்தபடியாக,  உங்கள் முழுப் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் விமான எண்களை புறப்படுதல் மற்றும் வருகை ஆகிய இரண்டிற்கும் வழங்கவும்.
  4. அதையடுத்து, உங்கள் எமிரேட், வாகனக் குறியீடு மற்றும் தட்டு எண்ணைத் தேர்ந்தெடுக்கவும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்று, ‘Pre-book Parking’ என்பதைக் கிளிக் செய்யவும். இறுதியாக, உங்கள் முன்பதிவு செய்யப்பட்ட இடத்துடன் உறுதிப்படுத்தல் பெறுவீர்கள்.

குறுகிய கால பார்க்கிங் கட்டணங்கள்

நீங்கள் விமான நிலையத்தில் யாரையாவது இறக்கிவிட்டாலோ அல்லது அழைத்துச் சென்றாலோ, குறுகிய கால பார்க்கிங் பகுதிக்குச் செல்ல வேண்டும். குறுகிய கால பார்க்கிங் கட்டணங்கள் பின்வருமாறு:

ADVERTISEMENT
  • 15 திர்ஹம்ஸ் – 6 முதல் 15 நிமிடங்கள்
  • 25 திர்ஹம்ஸ் – 16 முதல் 30 நிமிடங்கள்
  • 35 திர்ஹம்ஸ் – இரண்டு மணிநேரம் வரை
  • 55 திர்ஹம்ஸ் – மூன்று மணிநேரம் வரை
  • 65 திர்ஹம்ஸ் – நான்கு மணிநேரம் வரை
  • 125 திர்ஹம்ஸ் – 24 மணிநேரம்
  • 100 திர்ஹம்ஸ் – ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும்

எனவே அபுதாபியில் இருக்கக்கூடிய சையத் விமான நிலையத்திற்கு செல்லக்கூடிய நபர்கள் மேற்கண்ட விபரங்களை தெரிந்து வைத்துக்கொள்வதன் மூலம் வாகனங்களை பார்க்கிங் செய்யும் முறையை எளிதாக கையாளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel