ADVERTISEMENT

UAE பொதுமன்னிப்பு: ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு ஆதரவு வழங்கிய துபாயில் உள்ள துணை தூதரகம்..!!

Published: 29 Sep 2024, 7:10 PM |
Updated: 29 Sep 2024, 7:11 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய விசா பொதுமன்னிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அதன் வசதி மையங்கள் மூலம்  ஆயிரக்கணக்கான இந்திய குடிமக்களுக்கு உதவி செய்துள்ளது. செப்டம்பர் 1 முதல், துணைத் தூதரகம் அதன் அலுவலகத்திலும், அல் அவிரிலும் செயல்பட்டு வருகிறது, இது ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக அதிக காலம் தங்கியிருப்பவர்களை தங்களுடைய விசா நிலையை சட்டப்பூர்வமாக்க உதவுவதற்காக பல்வேறு இந்திய அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சுமார் 4,000க்கும் மேற்பட்ட சேவை தேடுபவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், 600க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் மற்றும் 800 அவசரகாலச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதையும், இந்தியாவுக்குத் திரும்ப விரும்பும் நபர்களுக்கு 500க்கும் மேற்பட்ட எக்ஸிட் அனுமதிகளைப் பெறுவதற்கும் உதவி செய்துள்ளதாக தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு திட்டம் தனிநபர்கள் தங்களுடைய ரெசிடன்ஸ் நிலையை சட்டப்பூர்வமாக்க அல்லது அபராதங்களை எதிர்கொள்ளாமல் வீடு திரும்ப அனுமதிக்கிறது. எனவே, அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் விசா தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை சீரமைக்க, உதவியை நாடுபவர்களுக்கான தொடர்பு விவரங்களையும் துணைத் தூதரகம் வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

தூதரகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, இந்திய குடிமக்கள் பயண ஆவணங்களை வழங்குவதற்கான வழிகாட்டுதலுக்காக 050-9433111 என்ற எண்ணில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம். கூடுதலாக, 24/7 PBSK ஹெல்ப்லைன் 800-46342 கூடுதல் ஆதரவை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT