ADVERTISEMENT

இந்திய பாஸ்போர்ட் சேவை 4 நாட்களுக்கு கிடைக்காது..!! அறிவிப்பை வெளியிட்ட இந்திய தூதரகம்..!!

Published: 20 Sep 2024, 9:02 PM |
Updated: 20 Sep 2024, 9:02 PM |
Posted By: Menaka

இந்திய பாஸ்போர்ட் சேவை போர்டலானது தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 4 நாட்களுக்கு செயல்படாது என்று அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, செப்டம்பர் 20, வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் செப்டம்பர் 24, திங்கட்கிழமை அதிகாலை 4:30 மணி வரை இந்திய பாஸ்போர்ட் சேவை செயல்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 22 வரை, தூதரக அலுவலகத்திலும் அனைத்து BLS சர்வதேச மையங்களிலும் அவசரகால ‘தட்கல்’ பாஸ்போர்ட் மற்றும் போலீஸ் அனுமதிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகள் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், செப்டம்பர் 21 அன்று அப்பாயிண்ட்மெண்ட் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 27 க்கு இடையில் வரும் திருத்தப்பட்ட தேதிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவ்வாறு கொடுக்கப்படும் திருத்தப்பட்ட சந்திப்பு தேதி விண்ணப்பதாரருக்கு வசதியாக இல்லாவிட்டால், திருத்தப்பட்ட அப்பாய்மெண்ட் தேதிக்குப் பிறகு அப்பாயிண்ட்மெண்ட்  இல்லாமலேயே அவர்கள் எந்த BLS மையத்திற்கும் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்காக தனி அப்பாயிண்ட்மெண்ட்  தேவையில்லை.

எவ்வாறாயினும், மற்ற தூதரக மற்றும் விசா சேவைகள் அனைத்தும் அமீரகம் முழுவதும் உள்ள அனைத்து BLS மையங்களிலும் செப்டம்பர் 21 அன்று தொடர்ந்து வழங்கப்படும் என்று அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel