ADVERTISEMENT

அமீரகத்தில் முடிவுக்கு வரும் கோடைகாலம்: இம்மாத இறுதியில் இருந்து வெப்பநிலை குறையும் என தகவல்..!!

Published: 3 Sep 2024, 12:11 PM |
Updated: 3 Sep 2024, 12:12 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய கோடைகாலம் இதுவரை இல்லாதளவில் அதிகளவு வெப்பநிலையை பதிவாக்கியிருந்த நிலையில் இந்த கோடைகாலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகின்றது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்ட அறிவிப்பின்படி, வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதியன்று ‘autumnal equinox’ எனப்படும் இலையுதிர்கால வெப்பநிலை தொடங்குவதால், குடியிருப்பாளர்கள் செப்டம்பர் 23 முதல் நாட்டின் வெப்பநிலை படிப்படியாகக்  குறைவதை உணரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, செப்டம்பர் பிற்பகுதியில் அமீரகவாசிகளின் வெளிப்புற செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு வெப்பநிலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, செப்டம்பர் மாதத்தில் பகல்நேரங்களில் வெப்பநிலையானது சராசரியாக 38.5°C-இலிருந்து 40.6°C வரை பதிவாகும். அதேசமயம், இரவுநேரங்களில் வெப்பநிலை 26.8°C முதல் 29.3°C வரை குறைந்து குளிர்ச்சியாக இருக்கும் என கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், மற்றொருபக்கம் செப்டம்பரில் இந்திய பருவமழையின் தாக்கம் குறைந்து, அரேபிய தீபகற்பத்தில் ஏற்படும் பாலைவன வெப்ப தாழ்வுகளால் சிலசமயங்களில் தூசி புயல் உருவாகலாம் என்றும், இதன்விளைவாக சாலைகளில் பார்வைத்திறன் குறையும் என்றும் NCM எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு அமீரகம் வேறு காலநிலையை நோக்கி நகர்வதை அனுபவிக்கும் அதே வேளையில், கிழக்கு பிராந்தியங்களில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் NCM தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், செப்டம்பர் மாத இறுதியில் நாட்டில் ஈரப்பதத்தின் அளவு சற்று உயரும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. NCMஇன் கூற்றுப்படி, சராசரி ஈரப்பதம் 49 சதவீதமாக இருப்பதால், நாடு முழுவதும் மூடுபனி மற்றும் பனிமூட்டம் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel