ADVERTISEMENT

துபாயில் புதிதாக 2 பாலங்கள் திறப்பு!! வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை 70% வரை குறைக்கும் என தகவல்…

Published: 16 Sep 2024, 8:43 PM |
Updated: 16 Sep 2024, 8:43 PM |
Posted By: Menaka

துபாயில் கார்ன் அல் சப்கா-ஷேக் முகமது பின் சையத் சாலை இன்டர்செக்சன் (Garn Al Sabkha-Sheikh Mohammed bin Zayed Road Intersection) மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று (செப்டம்பர் 15) இரண்டு புதிய பாலங்கள் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தால் (RTA) திறக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் மூலம் வாகன ஓட்டிகளின் பயண நேரம் 70 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்ப்பதாக RTA வின் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மட்டர் அல் தயர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஓட்டத்தை சீராக்குதல்:

RTA வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 601 மீட்டர் நீளம் கொண்ட முதல் பாலமானது, இரண்டு பாதைகளைக் கொண்டுள்ளது, இது ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் செல்லும் திறன் கொண்டது. இந்த பாலம் கார்ன் அல் சப்கா ஸ்ட்ரீட்டில் இருந்து ஷேக் முகமது பின் சையத் சாலை வரை கிழக்கு நோக்கி செல்லும் போக்குவரத்துக்கு சேவை செய்கிறது, பின்னர் அல் குசைஸ் மற்றும் தேராவை நோக்கி வடக்கே நீண்டு செல்கிறது.

ADVERTISEMENT

இந்த பாலம் ஓட்டுநர்களின் பயண நேரத்தை 40 சதவீதம் குறைப்பதுடன் பீக் ஹவர் பயணத்தை 20 நிமிடங்களில் இருந்து 12 நிமிடங்களாக குறைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது பாலம், 664 மீட்டர் நீளம் கொண்டது, இரண்டு பாதைகளைக் கொண்டுள்ள இந்த பாலம், ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனம் செல்ல அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஷேக் முகமது பின் சையத் சாலையில் இருந்து தெற்கு நோக்கி அல் யாலாய்ஸ் தெரு மற்றும் ஜெபல் அலி துறைமுகம் நோக்கி வரும் வாகனங்களின் ஓட்டத்தை பிரிப்பதன் மூலம் இந்த பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

RTAவின் படி, இந்த பாலம் வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை 70 சதவீதம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பயண நேரம் 21 நிமிடங்களில் இருந்து 7 நிமிடங்களாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது பாலம் எதிர்வரும்  அக்டோபர் மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது, இது கார்ன் அல் சப்கா தெருவின் சந்திப்பை அல் அசயேல் ஸ்ட்ரீட்டுடன் இணைக்கிறது. சுமார் 943 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகள் மற்றும் மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு 8,000 வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஷேக் சையத் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலை ஆகிய இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு இடையேயான போக்குவரத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இத்திட்டம் இப்போது 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அல் டேயர் தெரிவித்துள்ளார். மேலும், ஷேக் முகமது பின் சையத் சாலைக்கு இணையான சர்வீஸ் சாலையின் இன்டர்செக்‌ஷன்களில் 7 கிமீ நீளத்திற்கு மேம்பாடுகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

கூடுதலாக, இந்தத் திட்டம் புதிய தெரு விளக்குகள், போக்குவரத்து சமிக்ஞைகள், போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள், மழைநீர் வடிகால் நெட்வொர்க்குகள் மற்றும் நீர்ப்பாசன அமைப்புகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் என்றும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel