ADVERTISEMENT

UAE: நீங்கள் பயன்படுத்தாத வருடாந்திர விடுமுறையை எவ்வாறு ஈடு செய்யலாம்..??

Published: 2 Sep 2024, 3:08 PM |
Updated: 2 Sep 2024, 3:08 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்களில் வருடாந்திர விடுப்பு என்பது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் விதிமுறைகள் என்ன என்பது பற்றி தொழிலாளர்கள் தெரிந்து கொள்வது நல்லது. அந்த வகையில், வருடத்தில் எத்தனை நாட்கள் ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்புக்கு ஊழியருக்கு உரிமை உண்டு, பயன்படுத்தாத நாட்களை அடுத்த ஆண்டுக்கு நகர்த்த முடியுமா போன்ற பல்வேறு விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

அமீரகத்தில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் வருடத்திற்கு 30 நாட்கள் வருடாந்திர விடுப்பைப் பெற உரிமை உண்டு என்று அமீரகத்தின் வேலைவாய்ப்பு உறவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், ஒரு ஊழியர் 15 நாட்கள் வருடாந்திர விடுப்பை மட்டுமே அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்றும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புச் சட்டத்தின் 29வது பிரிவு கூறும் சட்டம்:

1. ஒரு ஊழியர் வருடாந்திர விடுப்பில் 15 நாட்களை மட்டும் அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லலாம் அல்லது அவர் பெறும் சம்பளத்தின் படி, பயன்படுத்தாத விடுப்புக்கான ரொக்க இழப்பீட்டைப் பெற முதலாளியிடம் கோரிக்கை வைத்து உடன்படலாம்.

ADVERTISEMENT

2. நிறுவனத்தில் பணியாளரின் சேவை முடிவடையும் பட்சத்தில், அடிப்படைச் சம்பளத்தின்படி, சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டிய வருடாந்திர விடுப்பின் மீதிக்கான பணம் அவருக்கு வழங்கப்படும்.

2022 ஆம் ஆண்டின் அமைச்சரவைத் தீர்மானம் எண் 1 இன் உறுப்புரை 19 (1) இன் மேற்கூறிய விதியின்படி ஒரு ஊழியர் தனது வருடாந்திர விடுப்பை எடுக்கவில்லை என்றால், அதற்குப் பதிலாக இழப்பீட்டைப் பணமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

ADVERTISEMENT

மேலும், வருடாந்திர விடுப்புக்கான ஒப்புதல் முதலாளியின் விருப்பப்படி உள்ளது. எனவே, ஒரு ஊழியர் அவரது 30 நாட்கள் வருடாந்திர விடுப்பை ஒரே நேரத்தில் எடுக்கலாமா அல்லது நிறுவனத்தின் மனிதவளக் கொள்கையைப் பொறுத்து வெவ்வேறு இடைவெளிகளாகப் பிரிக்கலாமா என்பதை முதலாளி முடிவு செய்யலாம்.

கூடுதலாக, ஒரு ஊழியர் எடுக்கும் அதிகபட்ச வருடாந்திர விடுப்பு நாட்கள் வெவ்வேறு சூழ்நிலைகளைப் பொறுத்தது. வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 29(8) இன் படி, ஊழியர் 30 நாட்கள் வருடாந்திர விடுப்பை ஒரே நேரத்தில் அல்லது இடைவெளியில் எடுக்கலாம். சில சமயங்களில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருடாந்திர விடுப்பு எடுக்க முதலாளி அனுமதிக்கலாம்.

அதேபோல், வேலைவாய்ப்புச் சட்டத்தின் பிரிவு 29 (9) க்கு இணங்க, ஒரு ஊழியர் தனது வேலையின் நீளத்தைப் பொருட்படுத்தாமல், பயன்பாட்டிற்கு முன்பே வேலையை விட்டுவிட்டால், கிடைக்காத வருடாந்திர விடுப்புக்கு ஒரு ஊழியர் உரிமையுடையவராக இருக்கலாம். இது அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel