ADVERTISEMENT

அபுதாபி: பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து இலவச பேருந்து பயணத்தை அனுபவிக்கலாம்..!! எப்படி தெரியுமா…??

Published: 8 Sep 2024, 8:50 PM |
Updated: 8 Sep 2024, 8:55 PM |
Posted By: Menaka

அமீரக தலைநகரான அபுதாபியில் தேவையற்ற பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்து இலவசமாக பேருந்து பயணத்தை அனுபவிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா..?? உங்களிடம் இருக்கும் பழைய காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை இனி குப்பையில் தூக்கி எறிய தேவையில்லை. அதற்கு பதிலாக சுற்றுச்சூழலை மேம்படுத்தும் முயற்சியில் பங்கு பெறுவதோடு இலவசமாக பேருந்தில் பயணிக்கும் வாய்ப்பையும் பெறலாம்.

ADVERTISEMENT

கடந்த 2022ஆம் ஆண்டு அபுதாபியின் போக்குவரத்து ஆணையமான அபுதாபி மொபிலிட்டி (AD Mobility) ஊக்கத்தொகை அடிப்படையிலான பிளாஸ்டிக் பாட்டில் மறுசுழற்சி முயற்சியை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் ஏஜென்சி அபுதாபி மற்றும் ஸ்மார்ட் மறுசுழற்சி தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நிறுவனமான சைக்கிள் டெக்னாலஜிஸ் ஆகியவற்றின் கூட்டாண்மையின் கீழ் வந்துள்ளது.

அண்மையில் கூட, அல் அய்ன் மற்றும் அல் தஃப்ராவில் இரண்டு புதிய மறுசுழற்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, இது அதிகளவிலான பொதுப் போக்குவரத்து பயனர்கள் இந்த சுற்றுச்சூழல் நட்பு வெகுமதி திட்டத்தில் இருந்து பயனடையும் வாய்ப்பை வழங்குகிறது.

ADVERTISEMENT

இது எப்படி செயல்படுகிறது?

பயனர்கள் ‘Cycled Rewards’ ஆப் மூலம் ரிவார்ட் பாய்ண்ட்களை டிஜிட்டல் முறையில் சேகரிக்கலாம். அவர்கள் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு பாட்டிலுக்கும், தங்கள் ஹஃபிலத்  அட்டையில் கிரெடிட்டாக மாற்றக்கூடிய புள்ளிகளைப் பெறுகிறார்கள், இது பேருந்துக் கட்டணத்தைச் செலுத்தப் பயன்படும்.

வெகுமதி புள்ளிகளின் மதிப்பு:

• சிறிய பாட்டில் (600 மில்லி அல்லது அதற்கும் குறைவான பாட்டில்) = 1 புள்ளி

ADVERTISEMENT

• பெரிய பாட்டில் (600 மில்லிக்கு மேல்) = 2 புள்ளிகள்

• ஒவ்வொரு புள்ளியும் 10 ஃபில்ஸ் மதிப்புடையது, எனவே பயனர்கள் 10 புள்ளிகளைச் சேகரித்தவுடன், அட்டையில் 1 திர்ஹம்ஸை கிரெடிட்டாக பெறுவார்கள்.

‘Cycled Rewards’ ஆப் மூலம் ரிவார்ட் பாய்ண்ட்களை பெறுவது எப்படி?

  • உங்கள் மொபைலில் ‘Cycled Rewards’  அப்ளிகேஷனை பதிவிறக்கி, உங்கள் மொபைல் எண் மற்றும் முழுப் பெயரை உள்ளிட்டு பதிவு செய்யவும். உங்கள் கணக்கை உறுதிப்படுத்த ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) பெறுவீர்கள்.
  • இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி மறுசுழற்சி நிலையத்தின் திரையில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
  • உங்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை நியமிக்கப்பட்ட ஸ்லாட்டில் விடவும்.
  • ஆப் மூலம் உங்கள் ரிவார்ட் பாயிண்ட்களை கண்காணிக்கத் தொடங்கலாம்.

பாய்ண்ட்ஸ்களை எவ்வாறு ஹஃபிலத் கார்டுக்கு மாற்றுவது?

நீங்கள் சேகரிக்கும் புள்ளிகளைப் பேருந்துக் கட்டணங்களுக்குப் பயன்படுத்த, உங்கள் எமிரேட்ஸ் ஐடியுடன் இணைக்கப்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட ஹஃபிலட் கார்டு உங்களுக்குத் தேவைப்படும். இந்த அட்டை அபுதாபி பேருந்து நிலையங்களில் அல்லது அதிகாரப்பூர்வ ஹஃபிலத் கார்டு இணையதளம் – www.hafilat.darb.ae மூலம் ஆன்லைனில் கிடைக்கும். ஹஃபிலட் அட்டையின் விலை 10 திர்ஹம்ஸ் ஆகும். நீங்கள் போதுமான புள்ளிகளைச் சேகரித்தவுடன், அவற்றை உங்கள் ஹஃபிலட் கார்டுக்கு மாற்ற பின்வரும் படிகளைப் பின்பற்ற வேண்டும்:

  1. சைக்கிள் ரிவார்ட்ஸ் ஆப்ஸைத் திறந்து ‘Redeem Now’ என்பதைத் தட்டவும்.
  2. அதன் பிறகு, ‘Direct Spend’  என்பதைத் தேர்ந்தெடுத்து,  ‘Integrated Transport Centre’ என்பதைத் தட்டவும்.
  3. அதைத் தொடர்ந்து, நீங்கள் சேகரித்த புள்ளிகளின் அடிப்படையில்,10 திர்ஹம்ஸ் மற்றும் 100 திர்ஹம்ஸ்க்கு இடைப்பட்ட தொகையை உள்ளிடவும்.
  4. பின்னர், உங்களின் தனிப்பயனாக்கப்பட்ட Hafilat அட்டை எண்ணை உள்ளிடவும்.
  5. இறுதியாக, ‘Redeem’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களின் ஹஃபிலத் கார்டுக்கு உங்கள் புள்ளிகள் வெற்றிகரமாக மாற்றப்பட்டவுடன் உறுதிப்படுத்தலைப் பெறுவீர்கள், பின்னர் அதை பேருந்துக் கட்டணத்தைச் செலுத்தப் பயன்படுத்தலாம்.

மறுசுழற்சி நிலையங்கள் உள்ள இடங்கள்:

  • அபுதாபி சென்ட்ரல் பஸ் நிலையம்
  • அல் அய்ன் பேருந்து நிலையம்
  • அல் தஃப்ரா மெயின் பஸ் நிலையம் (சையத் சிட்டி)

இந்த முயற்சியில் பங்கேற்பதன் மூலம், உங்கள் பஸ் கார்டை டாப் அப் செய்ய இலவச புள்ளிகளைப் பெறுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel