ADVERTISEMENT

2 மணி நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்: பாதுகாப்பாக தரையிறக்கி விமானிகள் அசத்தல்!!

Published: 11 Oct 2024, 7:15 PM |
Updated: 11 Oct 2024, 7:15 PM |
Posted By: Menaka

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 144 பயணிகளுடன் ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இரண்டு மணி நேரமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாக மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.40 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி வானில் பறக்க ஆரம்பித்த விமானத்தின் சக்கரம் உள்ளிழுக்கப்படாததால், மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் முயற்சித்து வந்தனர்.

விமானத்தில் உள்ள எரிபொருளை குறைத்த பிறகு, திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக  தரையிறக்க முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விமானம் வானில் வட்டமடித்தது.

ADVERTISEMENT

இந்திய நேரப்படி, சரியாக 8:15 மணிக்கு விமானத்தின் அடிப்பகுதியை உரசி ஆபத்தான முறையில் தரையிறக்க முயற்சி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி விமான நிலைய ஓடுபாதையில் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அதிகாரிகள் காத்திருந்த நிலையில், விமானிகள்  சொன்னபடி 8:15 மணிக்கு விமானத்தை பத்திரமாக ஓடுபாதையில் தரையிறக்கியுள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel