ADVERTISEMENT

UAE: தொலைந்த, சேதமடைந்த லக்கேஜ்களுக்கு எப்படி இழப்பீடு பெறலாம்..?? அமீரக சட்டம் சொல்வது என்ன..?? முழு வழிகாட்டி உள்ளே.!!

Published: 9 Oct 2024, 8:51 AM |
Updated: 9 Oct 2024, 8:53 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் விமான நிறுவனத்தின் விமானத்தில் பயணிக்கும் பயணியின் லக்கேஜ் தொலைந்து விட்டால், தொலைக்கப்பட்ட லக்கேஜுக்கு விமான நிறுவனம் பொறுப்பாகுமா, அதை எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் பயணி எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

ADVERTISEMENT

அமீரகத்தின் 2022 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 50, வணிகப் பரிவர்த்தனைகள் சட்டத்தை வெளியிடும் 353(2) பிரிவின்படி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து புறப்பட்ட அல்லது அமீரகத்தில் தரையிறங்கியுள்ள ஒரு விமான நிறுவனம் அதன் பயணிகளின் செக்-இன் லக்கேஜ்களுக்கு பொறுப்பாக இருக்கும்.

இதன் உட்பிரிவு (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள லக்கேஜ் என்பது, பயணத்தின் போது, ​​விமானத்தில் உள்ள பயணிகளால் எடுத்துச் செல்லப்படும் அல்லது விமான நிறுவனத்திடம் அதன் காவலில் இருக்கும் பொருட்களைக் குறிக்கிறது.

ADVERTISEMENT

அதேபோல், ஒரு விமான நிறுவனம் அதன் பயணிகளின் செக்-இன் லக்கேஜ் சேதம் அல்லது இழப்புக்கு பொறுப்பாக இருக்கலாம் என்று அமீரகத்தின் வணிக பரிவர்த்தனைகள் சட்டத்தின் 356 (1)இல் கூறப்பட்டுள்ளது. அதாவது, விமானப் போக்குவரத்தின் போது, செக்-இன் செய்யப்பட்ட லக்கேஜ்களுக்கு சேதம் ஏற்பட்டால், அந்த சேதத்திற்கு விமான நிறுவனமே பொறுப்பாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், போக்குவரத்தின் போது பயணிகளின் லக்கேஜ்களுக்கு சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டால் பயணிக்கு லக்கேஜ்களை வழங்குவதற்கு முன்பு, ஒரு விமான நிறுவனம் ஒரு கிலோ லக்கேஜுக்கு 500 திர்ஹம் வரையிலும் இழப்பீடு வழங்க வேண்டும் என அமீரக வணிக பரிவர்த்தனைகள் சட்டத்தின் 359(2) ல் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த சட்டத்தின்படி “லக்கேஜ்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லும்போது சேதம் ஏற்பட்டால், ஒவ்வொரு கிலோவிற்கும் 500 திர்ஹம்களுக்கு மிகாமல் இழப்பீட்டு தொகை இருக்க வேண்டும். எவ்வாறாயினும், லக்கேஜ் அல்லது சரக்குகளை டெலிவரி செய்தவுடன், அப்பொருளின் மதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்க பயணி ஒரு சிறப்பு அறிக்கையை அனுப்பினால், கூடுதல் கட்டணத்தை விமான நிறுவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லக்கேஜ் மற்றும் சரக்குகளின் உண்மையான மதிப்பை விட பயணி குறிப்பிட்ட மதிப்பு அதிகமாக இருப்பதாக விமான நிறுவனம் கருதினால் அதனை நிரூபிக்கும் வரை, அப்பயணியால் குறிப்பிடப்பட்ட தொகையை விமான நிறுவனம் இழப்பீடாக செலுத்த வேண்டும்” என்றும் அச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, பயணியின் லக்கேஜ்களின் இழப்பு அல்லது சேதம் தொடர்பாக பயணி விமான நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்திலும்  வழக்குத் தாக்கல் செய்யவும் முடியும். இது ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிக பரிவர்த்தனைகள் சட்டத்தின் 368 வது பிரிவுக்கு இணங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பின்வரும் நீதிமன்றங்களில் ஏதேனும் ஒன்றில் வழக்கை தாக்கல் செய்ய பயணிக்கு விருப்பம் உள்ளதாகவும் கருதப்படுகிறது.

  1. விமான நிறுவனத்தின் இருப்பிடம் அமைந்துள்ள நீதிமன்றம்.
  2. விமான நிறுவனத்தின் செயல்பாட்டின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள நீதிமன்றம்.
  3. அமைப்பு அல்லது அவருக்கான ஒப்பந்தத்தை முடிக்கும் வசதி அமைந்துள்ள நீதிமன்றம்.
  4. விமான நிறுவனம் சேருமிடத்தில் உள்ள நீதிமன்றம்.

மேற்கூறிய சட்ட விதிகளின் அடிப்படையில், பயணிகள் தங்கள் விமான டிக்கெட்டை சரிபார்க்க வேண்டும், அதில் வழக்கமாக செக்-இன் லக்கேஜ் இழப்பு தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இருக்கலாம். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் லக்கேஜ் இழப்பு தொடர்பான எழுத்துப்பூர்வ புகாரை பயணிகள் தாக்கல் செய்யலாம்.

மேலும், தொடர்புடைய விமான நிறுவனம் புகாருக்கு ஒத்துழைக்காத பட்சத்தில், துபாய் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டிக்கு புகார் கொடுப்பதை பயணிகள் பரிசீலிக்கலாம். அதன் பிறகு தேவைப்பட்டால் துபாயில் உள்ள விமான நிறுவனத்திற்கு எதிராக துபாய் நீதிமன்றத்தில் விமான நிறுவனத்திற்கு எதிராக உரிமைகோரல் வழக்கையும் பயணிகள் தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel