ADVERTISEMENT

உலகிலேயே முதன் முதலாக மிட்டாய்க்காக பிரத்யேக அருங்காட்சியகத்தை திறக்கும் துபாய்..!! எப்போ தெரியுமா..??

Published: 17 Oct 2024, 12:11 PM |
Updated: 17 Oct 2024, 7:17 PM |
Posted By: Menaka

ஆடம்பரம் மற்றும் ஷாப்பிங் போன்றவற்றிற்கு புகழ்பெற்ற துபாய் பல்வேறு புதுவிதமான அனுபவங்களை தொடர்ந்து உருவாக்கி வருகிறது. அதன் வரிசையில் ஒன்றாக உலகிலேயே முதன் முறையாக மிட்டாய் அருங்காட்சியகத்தை (Museum of Candy) அமீரகம் திறக்கின்றது. கேண்டி என்று சொல்லக்கூடிய மிட்டாய் பொதுவாகவே சிறுவர்கள் விரும்பக்கூடிய பொருளாகும். அதனை வைத்தே அருங்காட்சியகம் எனும் போது இந்த இடமானது சிறுவர்களை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

ADVERTISEMENT

இந்த அருங்காட்சியகத்தில் ஸ்வீட்டோபியா (Sweetopia) உட்பட 15 விதமான கருப்பொருள் கொண்ட அறைகள் இருக்கும் என்றும், இதில் ஊடாடும் காட்சிகள் (interactive displays), இனிப்பு விருந்துகள் மற்றும் விளையாட்டுத்தனமான செயல்பாடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, மிட்டாய்களுடன் எழுத்துகள் நடனமாடும் லெட்டர்கிராம் (Lettergram), ஐஸ்கிரீம் போன்ற ஜில்லென்ற இனிப்புகளை அனுபவிக்க ஜில் அண்ட் த்ரில் (Chill and Thrill), ஃபிரெஞ்சு உணவு வகைகள் நிறைந்த நைட் இன் பாரிஸ் (Night in Paris) மற்றும் இனிப்பான சோலைக்குள் மூழ்கடிக்க கம்மி பியர் பூல் (Gummy Bear Pool) போன்ற பல்வேறு இடங்கள் சிறந்த அனுபவத்தை உறுதியளிக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மியூசியம் ஆஃப் கேண்டி அதன் இனிமையான சலுகைகளை அனுபவிக்க இன்ஸ்டாகிராமில் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக அருங்காட்சியக நிர்வாகம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “இனிப்பு, கலவை என எல்லாம் நன்றாக இருக்கிறது! எங்கள் கதவுகள் விரைவில் திறக்கப்படும்! உங்கள் குழுவினரை டேக் செய்து உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்! கண்களுக்கும் நாவிற்கும் சுவையளிக்கக்கூடிய விருந்தில் கலந்து எங்கள் துடிப்பான கேண்டி உலகில் மூழ்கி விடுங்கள்!” என்று விளம்பரம் செய்துள்ளது.

பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உம் ஹுரைர் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் வரக்கூடிய அக்டோபர் 31-ம் தேதி திறக்கவுள்ளது.

ADVERTISEMENT

நேரங்கள்

திங்கள் முதல் வியாழன் வரை காலை 10-இரவு 10 மணி வரை மற்றும் வெள்ளி முதல் ஞாயிறு வரை காலை 10 மணி முதல் நள்ளிரவு வரை செயல்படும். இது 60 நிமிட அனுபவமாகும்.

டிக்கெட்டுகள்

குழந்தைகளுக்கு 99 திர்ஹம்ஸ் மற்றும் பெரியவர்களுக்கு 109 திர்ஹம்சில் இருந்து டிக்கெட் விலை தொடங்குகின்றன. மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதை இலவசமாக அனுபவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை https://feverup.com/ என்ற லிங்கில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel