ADVERTISEMENT

அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு.. NCM தகவல்..!!

Published: 7 Oct 2024, 11:50 AM |
Updated: 7 Oct 2024, 11:50 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்றைய தினம் (திங்கள்கிழமை) ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் ஒரு சில பகுதிகளில் வெப்பநிலை சற்று உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டின் உள்பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகக்கூடும் என்பதால் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் NCM தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிக்கையின் படி, தலைநகர் அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 7 திங்கள் முதல் அக்டோபர் 9 புதன்கிழமை வரை பல்வேறு தீவிரத்துடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்தப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் வானிலை ஏற்ற இறக்கங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் அடுத்த சில நாட்களுக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மழை பெய்யும் என்பதால், கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

அதே நேரத்தில் இன்று ஈரப்பதம் 20 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை இருக்கும் என்றும், அதே சமயம் அபுதாபி மற்றும் துபாயில் வெப்பநிலை அதிகபட்சமாக 39 டிகிரியை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

NCM வெளியிட்ட முன்னறிவிப்பில், காற்று லேசானது முதல் மிதமானதாக இருக்கும் என்றும், ஆனால் சில சமயங்களில் மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், அரேபிய வளைகுடாவில் அலைகள் லேசானது முதல் மிதமானது வரை ஓமன் கடலில் லேசான அலைகள் இருக்கும் என்றும் NCM கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel