ADVERTISEMENT

வீடியோ: அமீரகத்தில் நேற்று ஏற்பட்ட தூசியுடன் கூடிய சூறாவளிக் காற்று!!

Published: 24 Oct 2024, 11:50 AM |
Updated: 24 Oct 2024, 11:56 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் தூசியுடன் கூடிய சூறாவளிக் காற்று பல்வேறு வடிவங்களில் சுழன்று கொண்டிருந்த காட்சிகளை நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ளது. NCM பகிர்ந்துள்ள வீடியோக்களில், நேற்று (புதன்கிழமை) ராஸ் அல் கைமாவின் கல்பாவில் டொர்னடோ என்று சொல்லக்கூடிய தூசிகள் நிறைந்த பெரிய சூறாவளிக் காற்று சுழலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கக்கூடிய அபுதாபி, ஷார்ஜா, ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா ஆகிய எமிரேட்களில் ஆலங்கட்டி மற்றும் புழுதிப் புயல்களுடன் கூடிய மழை நேற்று பெய்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட வீடியோவில், ராஸ் அல் கைமாவில் ஏற்பட்ட கடும் புழுதிப்புயலையும் அமீரகத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையையும் காணலாம்.

ADVERTISEMENT

முன்னதாக, வெளியிடப்பட்ட முன்னறிவிப்பில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அரபிக்கடலில் இருந்து ஈரமான காற்று நாட்டை நோக்கி நகரும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலைத் துறை தெரிவித்திருந்தது. இது சில வெப்பச்சலன மேகங்கள் உருவாக வழிவகுக்கும் என்பதால், சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel