ADVERTISEMENT

துபாய்: இனி RTA சேவைக் கட்டணங்களை தவணை முறையில் எளிதாக செலுத்த வசதி..!! அடுத்த வாரம் முதல் நடைமுறை..!!

Published: 17 Oct 2024, 6:12 PM |
Updated: 17 Oct 2024, 6:12 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள குடியிருப்பாளர்கள் அடுத்த வாரம் முதல், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) சேவைகளைப் பயன்படுத்தும் போது, சேவைக் கட்டணங்களை தவணைகளில் பணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில் RTA-வானது, ஷாப்பிங் மற்றும் நிதிச் சேவைகள் செயலியான Tabbyயுடன் இணைந்து ஸ்மார்ட் கியோஸ்க்களில் ஆணையத்தின் சேவைகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தவணை வசதியை ஏற்பாடு செய்துள்ளது என்று RTAவின் டிஜிட்டல் சேவைகளின் இயக்குநர் மீரா அல் ஷேக் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Photos: Supplied

ADVERTISEMENT

அதாவது, டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன உரிமம் புதுப்பித்தல் மற்றும் அபராதம் செலுத்துதல் போன்ற RTA ஆல் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான கட்டணம் செலுத்தும் போது, ​​ஸ்மார்ட் RTA கியோஸ்க்களில் Tabbyயின் எளிதான தவணைத் திட்டத்தைத் தேர்வுசெய்ய வாடிக்கையாளர்களுக்கு விருப்பம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியைத் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தவணை திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் துபாய் நிறுவனங்களில் RTA-வும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாயில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ‘RTA payments’ வசதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுவதாக அல் ஷேக் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

துபாய் முழுவதும் உள்ள RTAவின் கியோஸ்க்குகள் அபராதம் செலுத்துதல், வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம், சான்றிதழ்கள் மற்றும் சீசனல் பார்க்கிங் கார்டு வழங்குதல் மற்றும் பிற சேவைகளை வழங்குகின்றன. அத்துடன் துபாய் எமிரேட் முழுவதும் 30 ஸ்மார்ட் கியோஸ்க்குகளை ஆணையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

RTAவின் ஸ்மார்ட் கியோஸ்க் மூலம், ஒரு வாடிக்கையாளர் தங்கள் வாகன உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து உடனடியாக அச்சிடலாம். இந்த முழு செயல்முறையும் ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே இருக்கும்  என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும், RTA வாடிக்கையாளர் சேவை மையங்களில் Tabby சேவை அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் அனைத்து டிஜிட்டல் சேனல்களிலும் விரிவாக்கம் செய்வது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் அல் ஷேக் தெரிவித்துள்ளார்.

Tabby சேவையானது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்தில் செயலில் உள்ளது. சுமார் 40,000 க்கும் மேற்பட்ட உலகளாவிய பிராண்டுகள் மற்றும் சிறு வணிகங்கள் ஆன்லைன் மற்றும் கடைகளில், நெகிழ்வான கட்டணங்களை வழங்குவதன் மூலம் வளர்ச்சியை விரைவுபடுத்த Tabbyஇன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel