ADVERTISEMENT

துபாய்: போக்குவரத்தை மேம்படுத்த அல் கைல் சாலையில் புதிய பாலம் திறப்பு.. RTA தகவல்!!

Published: 1 Oct 2024, 1:43 PM |
Updated: 1 Oct 2024, 1:43 PM |
Posted By: Menaka

துபாயில் தேராவை நோக்கி செல்லும் போக்குவரத்தை எளிதாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அல் கைல் சாலையில் புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதாக எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. அல் கமிலா மற்றும் ஹெஸ்ஸா ஸ்ட்ரீட் சந்திப்புகளுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் இரண்டு பாதைகளைக் கொண்டுள்ளது, இது ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் வரை அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 900 மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்பரப்பு சாலைகளின் மேம்பாடுகளும் செயல்படுத்தப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது. 700 மீட்டர் நீண்டுள்ள இந்த பாலம், ஜுமேரா வில்லேஜ் சர்க்கிளில் இருந்து அல் கைல் ரோடு வரை தேராவை நோக்கி போக்குவரத்தை மேம்படுத்துவதையும், குடியிருப்பு மற்றும் மேம்பாட்டுப் பகுதிகளை இணைக்கும் வகையில் போக்குவரத்துத் திறனை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று RTA கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக, செப்டம்பர் 15 அன்று துபாயில் இரண்டு புதிய பாலங்களை RTA திறந்து வைத்தது. இது கார்ன் அல் சப்கா-ஷேக் முகமது பின் சையத் சாலை இன்டர்செக்சன் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக வந்தது.

ADVERTISEMENT

இந்த திட்டம் வாகன ஓட்டிகளின் பயண நேரத்தை 70 சதவீதம் வரை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  RTA வின் இயக்குநர் ஜெனரலும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மேட்டர் அல் தயர் தெரிவித்திருந்தார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT