ADVERTISEMENT

திருச்சி-ஷார்ஜா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு..! எமர்ஜென்ஸி நிலை அறிவிப்பு..!!

Published: 11 Oct 2024, 6:36 PM |
Updated: 11 Oct 2024, 6:38 PM |
Posted By: Menaka

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 144 பேருடன் ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி வானில் பறக்க ஆரம்பித்தவுடன் விமானத்தின் சக்கரம் உள்ளிழுக்கப்படாததால், மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் நீடிப்பதால், சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அருகிலுள்ள பகுதிகளில் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

விமானத்தில் உள்ள எரிபொருளை குறைத்த பிறகு, விமானத்தை திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாக  தரையிறக்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, காற்றின் எதிர்த் திசையில் விமானத்தை தரையிறக்க முயற்சித்து வருவதாகவும், திருச்சி விமான நிலைய ஓடுபாதை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்  அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel