ADVERTISEMENT

அமீரகத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை..!! சில பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக NCM அறிவிப்பு…

Published: 11 Oct 2024, 12:15 PM |
Updated: 11 Oct 2024, 1:08 PM |
Posted By: Menaka

நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் கனமழையுடன் கூடிய ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக, நாட்டின் வானிலை துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

சமூகவலைதளங்களில் வெளியான மழை தொடர்பான வீடியோக்களில், நேற்று வெளுத்து வாங்கிய கனமழையால், ஃபுஜைராவில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதையும், வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் கார்கள் கடந்து செல்லும் போது வெள்ள நீரைத் தெளிப்பதையும் காணமுடிகிறது. மேலும், எமிரேட் முழுவதும் உள்ள அதிகாரிகள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சாலைப் பயனர்களுக்கு உதவியுள்ளனர். இதற்கு முன்பு, ஷார்ஜாவின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் ராஸ் அல் கைமாவில் கனமழை பெய்வதைக் காட்டும் வீடியோவை புயல் மையம் X தளத்தில் வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

தேசிய வானிலை ஆய்வு மையம், தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இருப்பதை கண்காணித்து வருவதாகவும், அடுத்த வாரத்தில் வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆழமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இது மத்திய அரபிக்கடலை நோக்கி நகர்ந்து அக்டோபர் 14 மற்றும் 15-ம் தேதிகளில் ஆழமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பச்சலன மேகங்கள் உருவாகி வருவதால், இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. மேலும், இன்றிரவு ஈரப்பதமான நிலை இருக்கும் என்றும் கணித்துள்ளது.

ADVERTISEMENT

அதேசமயம், நாட்டில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும் NCM வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் அலைகளின் நிலைமை சற்று சிறிதாக என்று கூறப்பட்டுள்ளது.

NCM வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, இன்று நாட்டின் மலைப்பகுதிகளில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 20°C ஆகவும், உள் பகுதிகளில் அதிகபட்சமாக 41°C ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அபுதாபியில் 39 டிகிரி செல்சியஸ் வரையிலும், துபாயில் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரப்பதத்தின் அளவு கடலோரப் பகுதிகளில் அதிகபட்சமாக 90 சதவீதத்தையும், மலைப் பகுதிகளில் குறைந்தபட்சமாக 15 சதவீதத்தையும் எட்டும் என்று NCM கூறியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel