ADVERTISEMENT

அபுதாபி பிக் டிக்கெட்: 25 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு, தங்கம் வெல்லும் வாய்ப்பு!! ‘2 வாங்கினால் 2 இலவசம்’ சூப்பர் டீல் அறிவிப்பு!!

Published: 1 Nov 2024, 7:05 PM |
Updated: 1 Nov 2024, 7:05 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபலமான பிக் டிக்கெட் அபுதாபி, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் டிசம்பர் மாத டிராவில் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் இந்த ஆண்டின் மிகப்பெரிய கிராண்ட் பரிசான 25 மில்லியன் திர்ஹம்ஸ் ரொக்கத் தொகையை வெல்வார் என்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அதிரடி பரிசுத் தொகையைத் தவிர்த்து, தினமும் 250 கிராம் எடையுள்ள 24 காரட் வகை தங்கக் கட்டிகளை வெல்லும் வாய்ப்பும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் என்று பிக் டிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலி நபருக்கு ஒரு BMW 840i கார் டிசம்பர் 3 ஆம் தேதி வழங்கப்படும் என்றும், அதே நேரத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு ஜனவரி 3, 2025 அன்று டிரா நடத்தப்பட்டு வெல்பவருக்கு Maserati Grecale கார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, நவம்பர் 1 முதல் நவம்பர் 28 வரை, ‘buy two, get two’ டீல் கிடைக்கும். இதில் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கும் பங்கேற்பாளர்கள் மேலும் இரண்டு டிக்கெட்டுகளை இலவசமாகப் பெறலாம்.

அதுமட்டுமில்லாமல், நவம்பர் 1 முதல் நவம்பர் 28 வரை 1,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிக் வின் போட்டிக்கான (Big Win Contest) வாராந்திர டிராக்களில் பங்கேற்பாளர்கள் தானாகவே நுழைவார்கள் என்றும் பிக் டிக்கெட் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த போட்டியில் ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றியாளர் வீதம் மொத்தம் நான்கு வெற்றியாளர்கள் டிசம்பர் 3 அன்று தி பிக் வின் லைவ் (The Big Win live) டிராவில் சேருவார்கள். டிசம்பர் 3 ஆம் தேதி நடக்கும் லைவ் டிராவின் போது ஒவ்வொரு வெற்றியாளரும் 20,000 திர்ஹம்ஸ் முதல் 150,000 வரை உத்தரவாதமான பரிசுகளைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் டிக்கெட் டிராவில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகளை www.bigticket.ae இணையதளத்தில் வாங்க முடியும் அல்லது சையத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் அய்ன் விமான நிலையத்தில் உள்ள கடை கவுண்டர்களில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel