ADVERTISEMENT

அபுதாபி முனிசிபாலிட்டி துவங்கும் 5 நாட்கள் பிரச்சாரம்.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..!!

Published: 5 Nov 2024, 1:33 PM |
Updated: 5 Nov 2024, 1:33 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் கைவிடப்பட்ட வாகனங்களுக்குத் தீர்வு காணவும், எமிரேட்டின் பொது தோற்றத்தை பராமரிக்கவும், ‘my clean vehicle’ என்ற கருப்பொருளின் கீழ் ஐந்து நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் ஆங்காங்கே தூசி படிந்த வாகனங்களை விட்டுச் செல்வது 3,000 திர்ஹம் அபராதத்திற்கு வழிவகுப்பதுடன் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று அபுதாபி நகர முனிசிபாலிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பிரச்சாரத்தில் முனிசிபாலிட்டி ஆய்வாளர்கள், எச்சரிக்கைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நகரத்தின் அழகியல் தோற்றத்தை சிதைக்காத வகையில், வாகனங்களை கைவிடாமல் அல்லது தூசியால் வாகனம் மூடிவிடாமல் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT

குடியிருப்பாளர்களிடையே பொறுப்புணர்வு கலாச்சாரத்தை ஊக்குவிப்பதையும், எதிர்மறையான நடத்தைகள் மற்றும் நடைமுறைகளைத் தவிர்க்க சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தின் கீழ், தூசி படிந்த வாகனங்களை கைவிட்டுச் செல்வது நகரின் அழகியலைக் கெடுக்கிறது என்பதையும், எமிரேட்டின் தோற்றத்தை பாதுகாத்து பராமரிப்பதன் அவசியத்தையும் பற்றி உரிமையாளர்களுக்குக் கற்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, இந்த பிரச்சாரத்தில் சுற்றுப்புறங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளின் அழகை மேம்படுத்துதல் மற்றும் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் பற்றிய விரிவான கல்வியும் கற்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel