ADVERTISEMENT

அமீரக தேசிய தின விடுமுறை: எகிறும் விமான டிக்கெட் புக்கிங்.. 56% உயர்வு..!!

Published: 13 Nov 2024, 8:50 AM |
Updated: 13 Nov 2024, 8:54 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் ஏராளமான வெளிநாட்டவர்கள், வரவிருக்கும் குளிர்காலம் மற்றும் அமீரகத்தின் தேசிய தின விடுமுறையை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு சுற்றலா செல்வதற்காக புறப்படத் தயாராகி வருகின்றனர். அமீரகத்தில் இருப்பவர்கள் மட்டுமின்றி குளிர்கால சீசன் ஆரம்பிப்பதால் மற்ற நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் இந்த காலகட்டத்தில் அதிகரித்து காணப்படும். துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல், புத்தாண்டு கொண்டாட்டம், பொழுதுபோக்கு தலங்கள் திறப்பு போன்றவை மக்களை அமீரகம் நோக்கி ஈர்க்கின்றது. இதனால் இந்த காலகட்டத்தில் பொதுவாகவே அமீரகத்தில் இருந்து வெளிநாடு செல்லவும் மற்ற நாடுகளில் இருந்து அமீரகம் வருவதற்குமான விமான டிக்கெட்டுகளின் கட்டணங்கள் கூடுதலாக இருக்கும்.

ADVERTISEMENT

இந்நிலையில் அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பலர் இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொண்டு தங்களின் தாய்நாட்டிற்கு செல்ல விரும்புகின்றனர். இன்னும் பலர் இந்த விடுமுறையை புது அனுபவத்தைடன் கழிக்க மற்ற வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை பெரிதும் விரும்புகின்றனர். அதிலும் சமீப காலமாக இது போன்ற விடுமுறை காலங்களில் அமீரக குடியிருப்பாளர்கள் அண்டை நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுலா செல்லும் வழக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலான அமீரகக் குடியிருப்பாளர்கள் இது போன்று வெளிநாடுகளுக்கு இந்தாண்டு குளிர்கால விடுமுறைக்குத் தயாராகி வருவதால், கடந்த ஆண்டை விட விடுமுறை காலத்திற்கான விமான டிக்கெட்டுகளின் முன்பதிவு 56 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், பயணிகள் அதிகளவு பயணம் செய்யக்கூடிய உச்ச பயணக் காலத்திற்கு முன்னதாகவே ப்ரமோஷன்களை பெறுவதால், விமானக் கட்டணங்கள் ஏறக்குறைய 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக பயண நிபுணர்கள் கூறுகின்றனர். தற்பொழுது, குளிர்கால விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவுகள் முழு வீச்சில் இருப்பதாகவும், இஸ்தான்புல், திபிலிசி (Tbilisi), பாகு (Baku) மற்றும் அம்மான் (Amman) போன்ற அருகிலுள்ள இடங்களுக்கு அதிக தேவை காணப்படுவதாகவும் பயண நிறுவனங்களின் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முன்பதிவு செய்வதை நோக்கிய இந்த மாற்றமானது, அமீரகத்தில் இருந்து செல்லும் பயணிகளில் சுமார் 30 சதவீதம் பயணிகள், விசா தேவைப்படும் இடங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிடும் பயணிகளின் வளர்ந்து வரும் போக்கைக் காட்டுகிறது என்றும் இதன் விளைவாக விமானக் கட்டணம் ஏறக்குறைய 11 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.

ADVERTISEMENT

அதிகரிக்கும் பயணத் தேவை

குளிர்கால விடுமுறையை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பயணத்திற்கான தேவை அதிகமாக இருப்பதாகவும், அது மிகவும் பிஸியான பருவம் என்றும் பயண நிபுணர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக பயண நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான பயணிகள் தங்கள் பயணத்திற்கு முன்னதாகவே சலுகைகள் குறித்து அறிய பயண நிறுவனங்களை அணுகுவதும், குளிர்காலம் அல்லது கோடைகாலம் எதுவாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தவறவிட விரும்பவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

அமீரக குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் குளிர்காலத்தில் பனிப்பொழிவு உள்ள இடங்களையே அதிகம் விரும்புகின்றனர் என்று குறிப்பிடும் பயண நிபுணர்கள் ஜார்ஜியா மற்றும் அருகிலுள்ள கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகளே அவர்கள் விரும்பும் பட்ஜெட் இடங்கள் என்றும் கூறுகின்றனர்.

தேசிய தின பேக்கேஜ்கள்

தற்போது, ஹாலிடே ஃபேக்டரி போன்ற தளங்களில், குளிர்காலம் மற்றும் தேசிய தின விடுமுறைக்காக பல்வேறு நாடுகளுக்கான பேக்கேஜ்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பயணிகளிடையே அதிகரித்து வரும் தேவை காரணமாக, பல பேக்கேஜ்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுள்ளது. அதன்படி, உஸ்பெகிஸ்தான், ரோம், கிரீஸ், ஜார்ஜியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான சில பேக்கேஜ்கள் அதிக தேவை காரணமாக விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வெவ்வேறு பட்ஜெட்டுகளுக்கான இலக்குகள்

பயண நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக பட்ஜெட் உள்ள பயணிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் பனிப்பொழிவை அனுபவிப்பது பிடித்தமானதாக உள்ளது. ஷெங்கன் விசாவில் வசிப்பவர்கள் பின்லாந்து, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகளுக்கும் அதே நேரத்தில் ஷெங்கன் விசா இல்லாதவர்கள் துருக்கி மற்றும் பால்கன் நாடுகளுக்கும் செல்ல விரும்புகிறார்கள் என்று கூறுகின்றனர்.

எனவே இந்த காலகட்டத்தில் விமான பயணம் மேற்கொள்ளவிருப்பவர்கள், வரவிருக்கும் ஒரு சில மாதங்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரித்து காணப்படும் என்பதால் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு விமான முன்பதிவை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel