தங்கத்திற்கு பிரபலமான துபாயின் கோல்ட் சூக் எக்ஸ்டென்ஷன் பகுதியில், 24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட டெஸ்லா சைபர்ட்ரக் கார் ஒன்று காட்சிக்கு வைத்துள்ளது. பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மினுமினுப்பாக இருக்கும் இந்த உயர் ரக காரை பரிசாக வெல்லும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்?
உண்மையில் இந்த காரை கோல்ட் சூக் எக்ஸ்டென்ஷன் டிராவில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்கள் பரிசாக வெல்லலாம். ஆம், இந்த டிராவின் வெற்றியாளருக்கு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பிரபலமான டெஸ்லா சைபர்ட்ரக்கை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, நவம்பர் 14 முதல் டிசம்பர் 29 வரை பங்கேற்கும் விற்பனை நிலையங்களில் 500 திர்ஹம்ஸ்க்கும் அதிகமாக செலவழிக்கும் ஷாப்பிங் ஆர்வலர்கள், ஒரு ரேஃபிள் டிக்கெட்டைப் பெற்று, எதிர்கால வடிவமைப்பின் சின்னமான டெஸ்லா எலெக்ட்ரிக் காரை வெல்வதற்கான வாய்ப்பைப் பெறலாம்.
இந்த இரட்டை மோட்டார் எலெக்ட்ரிக் வாகனம் குண்டு துளைக்காத எக்ஸோஸ்கெலட்டன், உடைந்து போகாத கண்ணாடி மற்றும் எட்டு மணி நேர சார்ஜில் 400 கிமீ தூரம் செல்லும் திறன்கொண்டது. மேலும் இது 6.7 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்ட ஒரு வாகனம் என்பதுடன் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாகும்.
தங்க முலாம் பூசப்பட்ட இந்த டெஸ்லா சைபர்ட்ரக்கின் உண்மையான விலையானது ஏற்பாட்டாளர்களால் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் தங்க முலாம் பூசப்படாத ஒரு புத்தம் புதிய காரின் சந்தை மதிப்பாடனது சுமார் 490,000 திர்ஹம்ஸ் ஆகும்.
இந்த காரை பரிசாக அறிவித்துள்ள கோல்ட் சூக் எக்ஸ்டென்ஷன் திட்டமானது, துபாயின் வளர்ச்சி திட்டங்களில் ஒன்றான தேரா என்ரிச்மென்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இதில் சுமார் 300 கடைகள் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel