ADVERTISEMENT

துபாயின் ஷேக் சையத் சாலையை ஆக்கிரமித்த சைக்கிள் ரைடர்கள்..!!

Published: 10 Nov 2024, 3:40 PM |
Updated: 10 Nov 2024, 3:40 PM |
Posted By: Menaka

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரைடு நிகழ்வின் ஐந்தாவது பதிப்பானது இன்று (நவம்பர் 10) விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த சைக்கிள் பந்தயத்தில் ஆயிரக்கணக்கான அனுபவம் வாய்ந்த சைக்கிள் ஓட்டுநர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

இந்தாண்டு பதிப்பில் அனுபவம் வாய்ந்த சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுப் பாதை அம்சம் காலை 5 மணிக்கு தொடங்கப்பட்டது. மேலும் 21 வயதுக்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ரைடர்களுக்கு பிரத்யேகமாக இந்த விரைவுப் பாதையானது திறக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில் பங்கேற்ற சைக்கிள் ரைடர்கள் துபாய் வேர்ல்ட் டிரேட் சென்டரில் இருந்து சஃபா பார்க் வரை திரும்பிச் செல்லும் 12 கிமீ ஷேக் சயீத் சாலைப் பாதையில் சராசரியாக 30 கிமீ/மணி வேகத்தை பராமரிக்க வேண்டும். காலை 6 மணிக்குள் வாகன ஓட்டிகள் பாதையை விட்டு வெளியேற வேண்டும்.

ADVERTISEMENT

புகழ்பெற்ற துபாய் ரைடு நிகழ்வின் கடந்த ஆண்டு பதிப்பில் 35,000 பேர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்தாண்டு பதிப்பில் ஆயிரக்கணக்கான சைக்கிள் ரைடர்கள் ஷேக் சையத் சாலையை ஆக்கிரமித்தனர். இந்நிகழ்வானது துபாய் காவல்துறையின் சைபர் டிரக் மற்றும் டெலிவரி ரைடர்ஸ் குழுவின் தலைமையில் ஒரு துடிப்பான அணிவகுப்பு மூலம் கொடியசைத்துத் துவங்கப்பட்டது.

இன்றைய சைக்கிள் போட்டியில் பங்கேற்றவர்களில் சிலர் தங்கள் தொழில்முறை ஆடைகளை அணிந்திருந்தனர், மற்றவர்கள் சைக்கிள் ஓட்டுதல் மெகா நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு வழங்கப்பட்ட ஊதா நிற டி-ஷர்ட்களை அணிந்து வந்தனர்.

இந்த மாபெரும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிகாலை 4:30 மணிக்கு  வீட்டிலிருந்து புறப்பட்டதாக தேராவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக துபாய் ரைடில் பங்கேற்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும், அதே இடத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் கிட்டத்தட்ட எங்கள் பிணைப்புக்கு ஒரு சான்று  என்றும் ஒன்றாக வசித்து வரும் ஹவுஸ்மேட்கள் கூறினர்.

அவர்களைப் போலவே, AUH ரைடர்ஸ் என்றழைக்கப்படும் சைக்கிள் ரைடர்கள் குழு, ஸ்பீட்லேப்ஸ் போட்டியில்  சரியான நேரத்தில் கலந்து கொள்வதற்காக அதிகாலை 2 மணிக்கு அபுதாபியில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது குறித்து குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் பேசுகையில், வழக்கமான துபாய் ரைடில் பல்வேறு நிலைகளில் பல சைக்கிள் ரைடர்கள் இருப்பதாலும், சராசரியாக மணிக்கு 20 கிமீ வேகத்தை பராமரிக்க வேண்டும் என்பதாலும் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும் என்றும், ஆனால், ஸ்பீட் லேப்ஸ் பற்றி கேள்விப்பட்டபோது அதைத் தவிர்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய உந்துதலாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பங்கேற்பாளர், “எந்தவொரு ரைடரும் தவறவிட விரும்பாத சின்னமான சைக்கிள் ஓட்டுதல் அனுபவங்களில் இதுவும் ஒன்று” என்று கூறியதுடன் “நாங்கள் 4 கிமீ பாதையைத் தேர்ந்தெடுத்தோம், இதனால் அனைத்து முக்கிய அடையாளங்களையும் கடந்து செல்ல முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel