ADVERTISEMENT

UAE: சென்னை சூப்பர் கிங்ஸ் லோகோவுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் எதிஹாட் விமானம்..!!

Published: 28 Nov 2024, 8:00 PM |
Updated: 28 Nov 2024, 8:00 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இநங்கும் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ், இந்தியன் பிரிமீயர் லீக் (IPL) அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸின் (CSK) நிறங்களில் ஜொலிக்கும் புத்தம் புதிய விமானத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

எதிஹாட் விமான நிறுவனத்தின் Airbus A320neo விமானத்தில் தான் CSK அணியை பிரதிபலிக்கும் நிறங்களும், லோகோவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது எதிஹாட் கேரியரால் இயக்கப்படும் முதல் வகை மற்றும் முந்தைய தலைமுறை விமானங்களை விட 20 சதவீதம் அதிக எரிபொருள் திறன் கொண்ட புதிய விமானமாகும்.

நீலம் மற்றும் மஞ்சள் நிறக் கலவையில் ஜொலிக்கும் இந்த விமானத்தின் தொடக்க விழா, சென்னையில் உள்ள CSK அணியின் சொந்த தளத்தில் வருகின்ற டிசம்பரில் நடைபெறும் என்றும் கேரியர் அறிவித்துள்ளது. இது எதிஹாட் கேரியரின் குறுகிய தூர வழித்தடங்களில் சேவை செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எதிஹாட் ஏர்வேஸ் பிப்ரவரி மாதம், 2024 கிரிக்கெட் சீசனுக்கான IPL அணியான சென்னை சூப்பர் கிங்க்ஸின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக பொறுப்பேற்றது. இந்த கூட்டாண்மையைத் தொடங்கும் ஒரு சிறப்பு விழா சென்னையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடைபெற்றது.

மேலும், இந்த கூட்டாண்மை அறிவிக்கப்பட்டதிலிருந்து பாரம்பரிய CSK பாணியான ‘விசில் போடு’ மூலம், ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக விமானத்தில் பெஸ்போக் விசில்களை விநியோகிப்பது உட்பட பயணிகளை ஈர்க்கக்கூடிய பல அனுபவங்களை எதிஹாட் அறிமுகப்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

 

View this post on Instagram

 

A post shared by Khaleej Tamil (@khaleejtamil)

கடந்த கால கூட்டாண்மை

இதுபோலவே, உலகளாவிய நிறுவனங்களுடனான அதன் கூட்டாண்மைகளைக் கொண்டாடுவதற்கு எதிஹாத் கடந்த காலங்களில் பிற லைவரிகளையும் கொண்டுள்ளது. இவற்றில் சில கிளப்பின் சிக்னேச்சர் ப்ளூவில் மான்செஸ்டர் சிட்டி எஃப்சி மற்றும் ஃபார்முலா 1 எதிஹாட் ஏர்வேஸ் அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் ஆகியவை அடங்கும்.

இவை தவிர, புகழ்பெற்ற DC சூப்பர் ஹீரோக்கள் மற்றும் லூனி ட்யூன்ஸ் கதாபாத்திரங்களைக் கொண்ட வார்னர் பிரதர்ஸ் வேர்ல்ட் அபுதாபி லைவரியை வெளியிட்டது, மேலும் சமீபத்தில் ஏர்பஸ் A321neo இல் ஒரு தனித்துவமான 20வது ஆண்டு விழாவை எதிஹாட் விமான நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel