ADVERTISEMENT

போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடியை அறிவித்த எமிரேட்..!! எந்தெந்த அபராதங்களுக்கு பொருந்தும்??

Published: 1 Nov 2024, 2:51 PM |
Updated: 1 Nov 2024, 2:54 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அஜ்மானில் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்ட குடியிருப்பாளர்களுக்கு வரும் நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 15, 2024 வரை, போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது தொடர்பாக அஜ்மான் காவல்துறை X தளத்தில் வெளியிட்ட பதிவில், அக்டோபர் 31 க்கு முன் அஜ்மானில் செய்யப்பட்ட விதிமீறல்களுக்கான அனைத்து அபராதங்களுக்கும் தள்ளுபடி பொருந்தும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் போக்குவரத்து புள்ளிகளை ரத்து செய்வதும் இதில் அடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், மோசமான விதி மீறல்களை இந்த தள்ளுபடி உள்ளடக்காது என்றும் அதிகாரம் கூறியுள்ளது. இலகுரக அல்லது கனரக வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டுதல், டிரக் ஓட்டுநர்கள் தடைசெய்யப்பட்ட இடத்தில் முந்திச் செல்வது, அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 80 கிமீக்கு மேல் தாண்டிச் செல்வது, முன் அனுமதியின்றி வாகனத்தில் மாற்றங்களைச் செய்வது ஆகியவை இதில் சேர்க்கப்படாத மோசமான மீறல்கள் ஆகும்.

ADVERTISEMENT

ஆகவே, அனைத்து வாகன உரிமையாளர்களும் தங்களின் மீறல்களுக்கு அபராதம் செலுத்துவதற்கான முடிவைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், போக்குவரத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த போக்குவரத்து விதிகளுக்கு இணங்குமாறும் அஜ்மான் காவல்துறை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக, அஜ்மானில் போக்குவரத்து மீறுபவர்களைப் பிடிக்க எலெக்ட்ரானிக் கேட்களை நிறுவுவதற்கு 26 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

AI-மூலம் இயக்கப்படும் இந்த அமைப்பு, வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது மற்றும் சீட் பெல்ட் அணியாதது போன்ற மீறல்களைக் கண்டறிய கேமராக்களுடன் ஸ்மார்ட் கண்காணிப்பைப் பயன்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட் சிஸ்டம் சாலை விபத்துகளைக் குறைப்பது மற்றும் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் இருவருக்கும் போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் அமைப்புகளைப் பயன்படுத்தி மீறல்களைக் கண்டுபிடிப்பது என்பது, போக்குவரத்து பாதுகாப்பின் மிக உயர்ந்த மட்டத்தை வழங்குவதற்கும், காலாவதியான உரிமத்துடன் வாகனத்தை ஓட்டுவதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் பெரிதும் பங்களிப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel