ADVERTISEMENT

சவுதி அரேபியா-இந்தியா இடையே விமான சேவை வழங்க Flyadeal நிறுவனம் திட்டம்..!! தலைமை நிர்வாகி தகவல்..!!

Published: 25 Nov 2024, 4:43 PM |
Updated: 25 Nov 2024, 4:43 PM |
Posted By: Menaka

சவுதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பட்ஜெட் விமான நிறுவனமான ‘flyadeal’ அடுத்த 12 மாதங்களில் இந்தியாவிற்கு தனது விமானச் சேவைகளை விரிவுபடுத்துவதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி ஸ்டீவ் கிரீன்வே தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

சவுதியின் முதன்மை விமான நிறுவனமான சவுதியாவின் (saudia airlines) துணை நிறுவனமான Flyadeal தற்போது ஜித்தா, ரியாத் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 30 இடங்களை உள்ளடக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக இந்தியா, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு அதன் சேவைகளை விரிவுபடுத்த ஆர்வம் காட்டுவதாக கிரீன்வே வெளிப்படுத்தியுள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று துபாயில் உள்ள ஸ்கிஃப்ட் குளோபல் ஃபோரமில் கலந்துகொண்டு பேசிய கிரீன்வே, “இப்போது சீனா எங்களின் முதன்மை விருப்பமாக உள்ளது, அடுத்ததாக இந்திய துணைக்கண்டத்திற்கு சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம், ஏனெனில் தொழிலாளர் போக்குவரத்து மற்றும் ஹஜ், உம்ரா போக்குவரத்து இந்தியாவிலிருந்து அதிகம் என்பதால் இது நிச்சயமாக அடுத்த 12 மாதங்களில் நிறைவேறும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், Flyadeal ஏற்கனவே சவுதியாவுடன் குறியீடு பகிர்ந்துள்ளதால், ரியாத் மற்றும் ஜித்தாவில் உள்ள சவுதியாவின் மையங்களை இணைப்பதாகவும், இதனால் இந்திய துணைக் கண்டத்திலிருந்து பறக்கும் பயணிகளை சவுதியா ஏர்லைன்சின் ஐரோப்பிய வழித்தடங்களுடன் இணைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மே மாதம், flyadeal தனது மிகப்பெரிய ஆர்டரை 51 Airbus A320 விமானங்களுக்கு வழங்கியது, மேலும் 12 A320neos உட்பட, 2030 ஆம் ஆண்டுக்குள் 100 விமானங்களை எட்டவும் flyadeal நிறுவனம் திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel