ADVERTISEMENT

அமீரகத்தில் கட்டணமின்றி டோல் கேட்களைக் எப்படி கடக்கலாம்? உங்களுக்கான விபரங்கள் இங்கே..!!

Published: 5 Nov 2024, 3:53 PM |
Updated: 5 Nov 2024, 4:37 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் டார்ப் டோல் கேட்கள் மற்றும் துபாயில் உள்ள சாலிக் டோல் கேட்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் துபாயில் ஒரு கிராசிங்கிற்கு 4 திர்ஹம்ஸ் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இது அன்றாடம் டோல் கேட்களைக் கடந்து செல்லும் ஓட்டுநர்களின் நிதிச்சுமைகளை அதிகரிக்கும்.

ADVERTISEMENT

துபாயில் ஏற்கனவே 8 சாலிக் டோல்கேட்கள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், கூடுதலாக மேலும் இரண்டு சாலிக் டோல் கேட்கள் விரைவில் செயல்பட உள்ளன. அதேபோன்று அபுதாபியிலும் ஷேக் சையத் பாலம், ஷேக் கலீஃபா பின் சையத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் முசாபா பாலம் போன்ற அபுதாபி நகரத்திற்கு செல்லும் முக்கிய பாலங்களில் டார்ப் டோல் கேட்கள் அமைந்துள்ளன.

எனவே, அடிக்கடி டோல் கேட்களைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் பட்ஜெட் காரணமாக, எப்படி டோல் கட்டணங்களைத் தவிர்க்கலாம் என்று யோசிப்பது வழக்கமானதுதான். உண்மையில், அவ்வாறு யோசிப்பவர்களால் டோல் கேட்களை கட்டணமின்றி பயன்படுத்த முடியும்.

ADVERTISEMENT

துபாய் மற்றும் அபுதாபியில் சில டோல் கேட்களை நீங்கள் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்து இலவசமாகக் கடந்து செல்ல முடியும். அப்படி எந்தெந்த நேரங்களில் டோல் கேட்களை இலவசமாகக் கடக்கலாம் என்பதைப் பற்றிய விபரங்களை பின்வருமாறு பார்க்கலாம்:

அல் மக்தூம் பாலம்

வாரந்தோறும் சனிக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கட்டணம் இல்லாமல் அல் மக்தூம் பாலத்தில் உள்ள டோல் கேட்டை கடக்கலாம். அதேபோன்று ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் நாள் முழுவதும் இந்த டோல்கேட் வழியாக கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

ADVERTISEMENT

அல் மம்சார் டோல் கேட்ஸ்

E11 இல் அல் மம்சார் சவுத் கேட் மற்றும் நார்த் கேட் என அல் மம்சார் பகுதியில் இரண்டு டோல் கேட்கள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்குள் அதே திசையில் இந்த இரண்டு கேட்களையும் நீங்கள் கடந்தால் ஒருமுறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

அல் சஃபா டோல் கேட்ஸ்

தற்போது அல் சஃபா பகுதியில் ஒரே ஒரு டோல் கேட் மட்டுமே உள்ளது. இம்மாத இறுதியில் புதிதாக அல் சஃபா சவுத் டோல் கேட் அந்த வழித்தடத்தில் செயல்பட உள்ளது. தற்போதைய அல் சஃபா டோல் கேட் ‘அல் சஃபா நார்த்’ என மறுபெயரிடப்படும். இரண்டு கேட்களும் செயல்பட்டதும், அல் மம்சார் டோல் கேட்களைப் போலவே பயணிகள் ஒரே திசையில் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு கேட்களைக் கடந்து சென்றால் ஒரு முறை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

டார்ப் டோல் கேட்

அபுதாபியில் கூட டோல் கேட் வழியைப் பயன்படுத்தி பணத்தை மிச்சப்படுத்தலாம். டார்ப் டோல் சிஸ்டம் பின்வரும் பீக் ஹவர்ஸில் மட்டுமே செயல்படும். அதாவது வார நாட்களில் காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கட்டணம் வசூழிக்கப்படும். மற்ற நேரங்களில் நீங்கள் டோல் வழியைப் பயன்படுத்தினால், உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. அது மட்டுமல்லாமல் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணம் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel