ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட் டிராவில் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசை வென்ற இந்தியர்.. நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள போவதாக அறிவிப்பு..!!

Published: 4 Nov 2024, 4:15 PM |
Updated: 4 Nov 2024, 4:18 PM |
Posted By: Menaka

ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வரும் அபுதாபி பிக் டிக்கெட் ராஃபிள் டிராவின் இந்த மாதத்திற்கான டிராவானது நேற்று (நவம்பர் 3) நடைபெற்றது. அதில் அமீரகத்தில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்றுள்ளார். ஷார்ஜாவில் வசிக்கும் இந்தியரான பிரின்ஸ் கொளச்சேரி செபாஸ்டியன் என்பவருக்கு நவம்பர் 3 அன்று நடந்த அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 20 மில்லியன் திர்ஹம்ஸ் கிராண்ட் பரிசு ஜாக்பாட் அடித்துள்ளது.

ADVERTISEMENT

கேரளாவைச் சேர்ந்த பிரின்ஸ், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்ற தற்போதைய சலுகையின் ஒரு பகுதியாக, மூன்றாவது டிக்கெட்டை இலவசமாகப் பெற்றதாகவும், ஒன்பது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் சேர்ந்து டிராவில் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டிராவில் பங்கேற்கும் அவர், எப்போதும் குழுவாக சேர்ந்து டிக்கெட் வாங்குவதாகவும், டிக்கெட் வாங்குவதற்கு ஒவ்வொருவரும் 100 திர்ஹம்ஸ் பங்களித்ததால், பரிசுத் தொகையை அவர்களுடன் சமமாகப் பிரித்துக் கொள்ளபோவதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

முதன்முதலில் 2015 இல் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சிறந்த வாய்ப்புகளைத் தேடி வந்த பிரின்ஸ், “நான் சிறந்த வாழ்க்கையை தேடி இங்கு வந்தேன். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் எனது வாழ்க்கை இந்தளவு சிறப்பாக மாறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், தனது சொந்த ஊரில் நடந்து வரும் தனது வீட்டின் கட்டுமானப் பணிகளால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தனது குழந்தைகளை நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டியிருந்ததாகவும், ஆனால் இப்போது, அவர்களை அழைத்து வந்து அமீரகத்திலேயே படிக்க வைக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய பிரின்ஸ், பணத்தை என்ன செய்வது என்று யோசிக்க குறைந்தது ஓரிரு நாட்கள் தேவை என்று கூறியதுடன், “நான் பின்னர் ஒரு தொழிலைத் தொடங்கலாம், ஆனால் இப்போதைக்கு, நான் என் வேலையை விடப்போவதில்லை” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel