ADVERTISEMENT

அமீரகத்தில் வரும் மூன்று நாட்களுக்கு தூசிப்புயலுடன் மழை பெய்யும்..!! NCM முன்னறிவிப்பு..!!

Published: 26 Nov 2024, 8:13 PM |
Updated: 26 Nov 2024, 8:19 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில், நாளை நவம்பர் 27 புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு புழுதிப் புயல் மற்றும் மழைப்பொழிவு ஏற்படும் என்று குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT

NCM வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி, இந்த நாட்களில் நாடு இரண்டு வெவ்வேறு வானிலை நிலைமைகளை அனுபவிக்கும் என்பது தெரிய வந்துள்ளது. ஒன்று கிழக்கில் இருந்து மேற்பரப்பு குறைந்த அழுத்த அமைப்பு ஒரு மாறும் வளிமண்டலத்தை உருவாக்கும் என்றும், இந்த அமைப்புகள் ஈரமான காற்றை உயர்த்தி, மேகங்களை உருவாக்கும் மற்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை போன்ற மழைப்பொழிவுக்கும் வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.

இந்த அமைப்புகளின் தீவிரத்தைப் பொறுத்து, இது ஒரு பெரிய பகுதியில் வானிலை நிலையை பாதிக்கலாம் என்று NCM கூறியுள்ளது. அதன்படி, புதன்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை மேக மூட்டம் அதிகரிப்பதில் தொடங்கி மழைப்போழிவு வரை குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணலாம் என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

வீடியோ செய்திகளுக்கு Youtube பக்கத்தை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளவும்…

ADVERTISEMENT

இது குறித்து NCM வெளியிட்டுள்ள பதிவில், புதன்கிழமை இரவு நாட்டின் மேற்குப் பகுதிகளில் படிப்படியாக மேகங்கள் உருவாகும், இந்த மேகக்கூட்டம் பின்னர் கிழக்கு நோக்கிப் பரவி, கடற்கரை, தீவுகள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் சில பகுதிகளைக் கடந்து நகரும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வியாழக்கிழமை அடர்த்தியான மேக மூட்டம் உள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை பரவலாக இல்லாவிட்டாலும், கடலோரப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் நாள் முழுவதும் மழை பெய்யக்கூடும் என்றும் NCM குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமைக்குள் வானிலை சீரடையத் தொடங்கும், குறிப்பாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் மேக மூட்டம் படிப்படியாக குறைந்து நாட்டில் தெளிவான வானிலை நிலவும் என்றும் NCM வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் கடலும் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காற்று தென்கிழக்கில் இருந்து வடகிழக்கு திசையிலும், வடமேற்கு திசையிலும் வீசும், மிதமான வேகத்தில் இருந்து சற்று வீரியத்துடனும் அவ்வப்போது குறிப்பாக கடலுக்கு மேல் பலமாகவும் வீசும், அவை நிலத்தில் தூசி மற்றும் மணலைக் கிளறி, அவ்வப்போது கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்கும் என்பதையும் NCM வெளிப்படுத்தியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.                      Link: Khaleej Tamil Whatsapp Channel